‘காலம் கடந்த ஞானோதயம்’ – முதல்வரின் அழைப்புக்கு தங்க.தமிழ்ச்செல்வன் பதிலடி

 

‘காலம் கடந்த ஞானோதயம்’ – முதல்வரின் அழைப்புக்கு தங்க.தமிழ்ச்செல்வன் பதிலடி

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் வருமாறு முதல்வர் அழைப்பு விடுத்திருப்பதை காலம் கடந்த ஞானோதயம் என தங்க.தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார்.

தேனி: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் வருமாறு முதல்வர் அழைப்பு விடுத்திருப்பதை காலம் கடந்த ஞானோதயம் என தங்க.தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்குப் பின் இன்று முதன்முறையாக தன் சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு தங்க.தமிழ்ச்செல்வன் வருகை தந்தார்.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது காலம் கடந்த ஞானோதயம். அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவார்கள்.

தினகரனுடன் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் கட்சியினர் பயப்படுகின்றனர். 

ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை கண்டித்து வருகிற 10-ந் தேதி ஆண்டிப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இதில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்ள உள்ளார். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்ட எங்களை துரோகம் செய்து தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.