காலணியில் குழந்தைகள் எடுத்த செல்பி : வைரல் போட்டோ!

 

காலணியில் குழந்தைகள்  எடுத்த செல்பி : வைரல் போட்டோ!

ஸ்மார்ட்போன் போல கையில் காலணியை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் செல்பி எடுக்க, அதற்கு நான்கு குழந்தைகள் பாஸ் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகின்றது.

ஸ்மார்ட்போன் போல கையில் காலணியை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் செல்பி எடுக்க, அதற்கு நான்கு குழந்தைகள் பாஸ் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகின்றது.

தகவல் சொல்லவும், தொடர்பு கொள்ளவும், நம் வாழ்வில் இடம் பிடித்த ஒரு அங்கம் தான் செல்போன். மாணவப் பருவத்திலேயே நம் தோளில் தொற்றிக் கொள்ளும் செல்போன்கள் கடைசி வரை உடன் வருகின்றன. ஏதாவது ஒரு நாள் செல்போன் தொலைந்து விட்டாலும் அன்று நம்மிடம் ஒரு கை ஒடிந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால்  அதே சமயம் ஸ்மார்ட்போன் நம் வாழக்கையை நமக்கே தெரியாமல் நம்மிடம் இருந்து பறித்து கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்மார்ட்போனின்  தாக்கத்தால் பல வீடுகளில் உறவுகள் முகம் கொடுத்து கூட பேசாமல் மூலைக்கு ஒரு ஸ்மார்ட்போனை கையில் வைத்து கொண்டு முகம் தெரியாதவர்களிடம் மணிக்கணக்கில் பேசி வரும் அவலம்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும், ஷேர்களும் வாங்குவதை ஸ்மார்ட் போன் வாசிகள் பெருமையாகக் கருதுகிறார்கள். ஆனால் செல்பி மோகம் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் உயிரை பலி வாங்கி விடுகிறது. 

இப்படி செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று எண்ணும் இக்காலகட்டத்தில், செல்போன் இல்லாமல் குழந்தைகள் சிலர் செல்பி  எடுக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஸ்மார்ட்போன் போல கையில் காலணியை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் நிற்க, அதற்கு  நான்கு குழந்தைகள் போஸ் கொடுக்கின்றன. மகிழ்ச்சியாக வாழ ஆடம்பரமும்,அலப்பறையும் தேவை இல்லை என்பதை இப்புகைப்படம் உணர்த்துகிறது.