காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ‘எலக்ட்ரிக் ஆட்டோ’ சேவை தொடக்கம் !

 

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ‘எலக்ட்ரிக் ஆட்டோ’ சேவை தொடக்கம் !

துபாய் நாட்டைச் சேர்ந்த KMC மற்றும் M Auto Electric Mobility நிறுவனத்தின் தயாரிப்பில் ரூ.100 கோடி முதலீட்டில் ரெட்ரோபிட் முறையில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிலவும் காற்று மாசுபாட்டில் 11 சதவீதம் வாகனங்களில் உபயோகப்படுத்தப் படும் பெட்ரோல் மற்றும் டீசல் தான் காரணம் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதனால், காற்று மாசுபாட்டைக் குறைக்கத் தமிழக அரசு மின்சார வாகனங்களை இயக்கும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அதன் படி, சமீபத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டன.

auto

சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீட்டைப் பெறுவதற்கு துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க அந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். அதன் மூலம், துபாய் நாட்டைச் சேர்ந்த KMC மற்றும் M Auto Electric Mobility நிறுவனத்தின் தயாரிப்பில் ரூ.100 கோடி முதலீட்டில் ரெட்ரோபிட் முறையில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

auto

இந்த ஆட்டோக்கள் 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை நிற்காமல் இயங்குமாம். அதிநவீன தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா மற்றும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டுள்ளது.தற்போது இயங்கி வரும் பெட்ரோல், டீசல் ஆட்டோக்களை  ரெட்ரோபிட் முறையில்  ரூ.1,50,000 செலவில் மின்சார ஆட்டோக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.