கார வடை

 

கார வடை

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 400கி
உளுந்தம் பருப்பு – 100கி
புழுங்கலரிசி – 25கி
வற்றல் – 3
பெருங்காயம், உப்பு, கடலை எண்ணெய் – சிறிது

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 400கி
உளுந்தம் பருப்பு – 100கி
புழுங்கலரிசி – 25கி
வற்றல் – 3
பெருங்காயம், உப்பு, கடலை எண்ணெய் – சிறிது

kaara vadai

செய்முறை
பச்சரிசியையும், புழுங்கலரிசியையும் ஒன்றாக கலந்து, நன்றாக கழுவிக் கொள்ளவும். பின் இவற்றை ஊற வைக்கவும். உளுந்தை தனியாக ஊற வைத்துக் கொள்ளவும். தனித்தனியாக இவற்றை அரைத்துக் கொள்ளவும். இப்போது, மாவுடன் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து எண்ணெயை நன்றாக காய வைத்து குழிவான கரண்டியால் ஊற்றி சிவந்ததும் எடுத்து விடலாம். விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலைகள், கறிவேப்பிலை சேர்க்கலாம். இவற்றுக்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி, தேங்காய் சட்னி சரியாக இருக்கும். மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்யலாம். மழைக் காலங்களுக்கு ஏற்ற சிற்றுண்டி வகையாகவும் இருக்கும்