கார சாரமான கனவாய் மீன் உருண்டைக் குழம்பு!

 

கார சாரமான கனவாய் மீன் உருண்டைக் குழம்பு!

சைவர்களின் பருப்பு உருண்டை குழம்புக்கும்,கோலா உருண்டைக் குழம்புக்கும் சரியான போட்டி இந்த குழம்பு.செய்வதற்கும் மிகவும் எளியது.சோறு, இட்லி, சப்பாத்தி எதற்கும் பொருத்தமான துணையாக இருக்கும்.

சைவர்களின் பருப்பு உருண்டை குழம்புக்கும்,கோலா உருண்டைக் குழம்புக்கும் சரியான போட்டி இந்த குழம்பு.செய்வதற்கும் மிகவும் எளியது.சோறு, இட்லி, சப்பாத்தி எதற்கும் பொருத்தமான துணையாக இருக்கும்.

fish

என்னென்ன தேவை.

( உருண்டை செய்ய )
கனவா மீன்  கால் கிலோ.
சின்ன வெங்காயம் 20
பச்சை மிளகாய் 10
மல்லி இலை
சீரகத்தூள்
முட்டை 2
பொட்டுக்கடலைப் பொடி
உப்பு

food

குழம்புக்கு தேவையானவை.
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
மல்லித்தூள் 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்

food

பட்டை,கிராம்பு,கடல் பாசி,அன்னாசிபூ
கறிவேப்பிலை
கடலை எண்ணெய்
உப்பு
தேங்காய் பால் ஒரு கப்.
இஞ்சிபூண்டு விழுது 2 ஸ்பூன்

food

எப்படிச் செய்வது.

கன்வா மீனைச் சுத்தம் செய்து ( தலைப் பகுதி தவிர) சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.அந்தத் துண்டுகளை ஒரு மிக்சியில் ஊற்றி , தண்ணீர் சேர்காமல் அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய்,சீரகத்தூள்,மல்லி இலை உப்பு,பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து பிசையுங்கள்.நன்றாக கலந்ததும்,முட்டைகளை உடைத்து அவற்றின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.இந்தக் கலவையை எலுமிச்சம்

food

பழ சைஸ் உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

food

குழம்பு செய்ய:

வாய் அகன்ற ஆழமில்லாத ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,அது சூடானதும் எண்ணெய் ஊற்றி,பட்டை,கிராம்பு,அன்னாசிப்பூ போட்டுத் தாளிக்கவும்.
அதில் வெட்டிவைத்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,வெங்காயம் பாதி வதங்கும்போது தக்காளி சேர்த்து அத்துடன் உப்பும் சேர்த்து வதக்குங்கள்.
இப்போது இஞ்சிப்பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்குங்கள்.அதன் பிறகு  மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிவிட்டு,இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து,கொதிக்க விடுங்கள்.

food

குழம்பு திரண்டு வரும்போது அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு கனவாய் உருண்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இடைவெளி விட்டு குழம்புச் சட்டியில் போடுங்கள்.பாதி முழுகி இருந்தால் போதும்.இப்போது சட்டியை மூடிவைத்து பத்துநிமிடம் வேக விடுங்கள்.அதன் பிறகு மூடியை திறந்து உருண்டைகளைத் திருப்பிப் போடுங்கள்.கடைசியாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி மீண்டும் 5 நிமிடம் வேகவிட்டால்,கனவா மீன் உருண்டைக்குழம்பு தயார்.