கார் வாங்கலாம்ன்னு இருக்கீங்களா! உடனே வாங்குங்க! அடுத்த மாதம் விலை கூடுது….

 

கார் வாங்கலாம்ன்னு இருக்கீங்களா! உடனே வாங்குங்க! அடுத்த மாதம் விலை கூடுது….

உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதால் அதனை சமாளிக்க கார்களின் விலையை அடுத்த மாதம் உயர்த்த போவதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் நம் நாட்டில் கார் விற்பனை விலவரம் மிகவும் மந்தகதியில்தான் உள்ளது. விற்பனை படுத்ததால் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் கையிருப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து அந்த நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப உற்பத்தியை குறைக்க தொடங்கின. இருப்பினும் விற்பனை மிகவும் மோசமாக இருந்ததால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆலைகளில் வேலை நாட்களை குறைக்க தொடங்கின.

கார் விலை உயருகிறது

மேலும், கார் விற்பனை அதிகரிக்க இதுவரை இல்லாத சலுகைகளை கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வழங்கி வருகின்றன. ஆனாலும் விற்பனை நினைத்த மாதிரி முன்னேற்றம் கண்டதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், பல்வேறு உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதால் வேறுவழியில்லாமல் கார்களின் விலையை 2020 ஜனவரியில் உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி இந்தியா கார் மாடல்கள்

இது தொடர்பாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதால், அதன் தாக்கத்தை பல்வேறு மாடல் கார்களின் விலை உயர்வு வாயிலாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்தி வேண்டியது நிறுவனத்துக்கு தவிர்க்க முடியாத ஆகிவிட்டது என தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனம் தற்போது ரூ.2.89 லட்சம் முதல் ரூ.11.47 வரையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனம் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளதால், அதனை பின்பற்றி மற்ற நிறுவனங்களும் கார் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், கார் வாங்கணும்ன்னு நினைச்சா இந்த மாசமே வாங்குங்க.