கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து பிக்பாஸில் பங்கேற்ற நடிகர் படுகாயம் !

கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து பிக்பாஸில் பங்கேற்ற நடிகர் படுகாயம் !

தெலுங்கான மாநிலம் ஐதரபாத்தில் கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த திரைப்பட நடிகரும், பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளருமான சம்பூர்னேஷ் பாபு காயம் அடைந்தார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சம்பூர்னேஷ் பாபு தனது குடும்பத்தினருடன் தெலுங்கானா மாநிலம் ஐதபாராத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்.

sampoornesh babu

அப்போது சித்திப்பேட்டை என்ற இடத்திற்கு வரும்போது அவர்கள் பயணம் செய்த கார் மீது  தெலுங்கானா மாநில அரசுப் பேருந்து அதிவேகமாக மோதியது.  இந்த விபத்தில் நடிகரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சிறிய காயங்களுடன் தப்பினர். விபத்தில் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

sampoornesh babu

இயக்குநர் ஸ்டீவன் ஷங்கரின் வொர்ஸ்ட் பாஸிபள் பிலிம் படத்திற்கு பின்னர் சம்பூர்னேஷ் பிரபலம் ஆனார். இதையடுத்து  அவருக்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சூரியாவின் சிங்கம் படத்தின் 3 பகுதிகளிலும், சம்பூர்னேஷ் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.