கார், பைக் விற்பனை சரிவு ! கோவா முதல்வர் அதிரடி !

 

கார், பைக் விற்பனை சரிவு ! கோவா முதல்வர் அதிரடி !

சரிந்து வரும் மோட்டார் வாகன விற்பனையை ஓரளவேனும் தூக்கி நிறுத்தும் முயற்சியில் புதிய வாகனங்களுக்கான சாலை வரியை 50 சதவீதம் வரை குறைத்து கோவா முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சரிந்து வரும் மோட்டார் வாகன விற்பனையை ஓரளவேனும் தூக்கி நிறுத்தும் முயற்சியில் புதிய வாகனங்களுக்கான சாலை வரியை 50 சதவீதம் வரை குறைத்து கோவா முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோவா தலைநகர் பனாஜியில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் சாலை வரி 50% வரை குறைக்கப்படுவதாக அறிவித்தார். கடந்த சில மாதங்களாக மோட்டார் வாகனங்களின் விற்பனை நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது.

goacm

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து, தங்கள் தொழிலாளிகளுக்க கட்டாய விடுப்பு அளித்து வருகிறது. தங்கள் தொழிலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கோவா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் முதற்கட்டமாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீதான சாலை வரியை 50 சதவீதம் வரை குறைக்க உத்தரவிட்டார். இந்த நடைமுறை டிசம்பர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். கடந்த மாதம் புதிய சொகுசு வகுப்பு வாகனங்களுக்கு சாலை வரியில் 50% தள்ளுபடி செய்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அனைத்து வாகனங்களுக்கு சாலை வரி குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.