கார், பைக்குக்கு ஈ.எம்.ஐ கட்டணுமே… மச்சினனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் பகீர் வாக்குமூலம்

 

கார், பைக்குக்கு ஈ.எம்.ஐ கட்டணுமே… மச்சினனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் பகீர் வாக்குமூலம்

பைக், கார் என்று சொகுசாக வாழ செயின் பறிப்பில் ஈடுபட்டேன் என்று போலீசில் சிக்கிய பெண் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூரில் மளிகைக் கடை வைத்திருக்கும் பேச்சியம்மாள் என்பவரின் நகையை இளைஞர்கள் இருவர் பறித்து இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

பைக், கார் என்று சொகுசாக வாழ செயின் பறிப்பில் ஈடுபட்டேன் என்று போலீசில் சிக்கிய பெண் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

revathi

சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூரில் மளிகைக் கடை வைத்திருக்கும் பேச்சியம்மாள் என்பவரின் நகையை இளைஞர்கள் இருவர் பறித்து இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஹெல்மெட், மழை கோட் அணிந்த ஒருவர் அமர்ந்திருப்பதும், நகையைப் பறித்த நபர் பின்னால் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து அந்த பைக் சென்ற பாதையில் உள்ள 64 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். கடைசியாக அந்த வண்டி வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அருகே திரும்பியிருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எதிலும் இந்த வண்டி பதிவாகவில்லை. எனவே, செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் வில்லிவாக்கம் சப்-வே அருகேதான் இருக்க வேண்டும் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.

cctv

இதைத் தொடர்ந்த அந்த பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் ஆன நிலையில் அந்த வண்டியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது, சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தில் வந்த ரேவதி என்பவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அனைத்து ஆவணங்களும் பக்காவாக இருந்தது. கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் எந்த ஒரு தயக்கமுமின்றி துணிவாக பதில் சொல்லியுள்ளார். பைக் திருட்டு நடந்த இடத்திலிருந்தது என்பது தெரிகிறது, ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லையே என்று யோசித்தபோது, ரேவதி அணிந்திருந்த வளையல் அவர்கள் கண்ணில் பட்டது. சிசிடிவி கேமராவில் ரெயின்கோட் அணிந்து சென்ற நபர் கையிலிருந்த அதே வளையல்.
இதனால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ரேவதி உண்மையை ஒப்புக்கொண்டார். தன்னுடைய மச்சினன் ராஜேஷ் உடன் இணைந்து பேச்சியம்மாளிடம் நகை பறித்ததாக கூறினார்.

cctv

தொடர்ந்து விசாரணையில் தன்னைப் பற்றி அவர் கூறியுள்ளார். 
ஏற்கனவே ரேவதிக்கு விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பிறகு ஜெயச்சந்திரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். கணவர் ஜெயச்சந்திரன் ஐ.சி.எஃப் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேனேஜராக உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரேவதி தனியாக வந்துவிட்டாராம். முதல் கணவரின் தம்பிதான் ராஜேஷ்.
தனக்கு நிறைய கடன் இருந்ததாகவும், அதை அடைக்க கணவர் ஜெயச்சந்திரன் உதவவில்லை என்றும், பணம் இல்லாததால் திருட முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக புதிதாக இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியிருக்கிறார் ரேவதி. ஏற்கனவே, ரேவதியிடம் ஒரு காரும் உள்ளது. இந்த இரண்டுக்கும் சேர்த்து மாதம் ரூ.15 ஆயிரம் ஈ.எம்.ஐ கட்ட வேண்டுமாம். 
கணவரை விட்டு தனியாக வந்துவிட்டதால் வருமானத்துக்காக டிஃபன் கடை நடத்தி வந்துள்ளார் ரேவதி. அதில் போதுமான பணம் கிடைக்கவில்லை. இதனால் ஈ.எம்.ஐ கட்ட என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் செயின் பறிப்பு ஐடியா தோன்றியுள்ளது. டிசம்பர் 5ம் தேதி பேச்சியம்மாள் கழுத்தில் நிறைய செயின் இருப்பதை பார்த்திருக்கிறார் ரேவதி. இவரிடமிருந்து செயின் திருட்டை ஏன் தொடங்கக் கூடாது என்று மச்சினன் ராஜேஷை துணைக்கு அழைத்துள்ளார். 

cctv

அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக நம்பர் பிளேட்டை மாற்றியுள்ளார். ரெயின்கோட், ஹெல்மெட் அணிந்துள்ளார். வில்லிவாக்கத்திலிருந்து அம்பத்தூர் வந்து சமயம் பார்த்து பேச்சியம்மாள் கழுத்திலிருந்து நகையைப் பறித்துவிட்டு தப்பியுள்ளனர். நகையை விற்ற பணத்தில் ஈ.எம்.ஐ கட்டிவிட்டு, மீதி பணத்தில் ஜாலியாக இருந்துள்ளார் ரேவதி. அடுத்து எங்கு செயின் பறிக்கலாம் என்று திட்டமிட்டுவந்த வேளையில் மாட்டிக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
ரேவதி மற்றும் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கை எந்த அளவுக்கு மனிதர்களை கீழ்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை ரேவதியைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.