கார் ஓட்டும்போது வந்த சுகமான காற்று! அசதியில் சீட்டிலிருந்தபடியே தூங்கிய ஓட்டுநர் 

 

கார் ஓட்டும்போது வந்த சுகமான காற்று! அசதியில் சீட்டிலிருந்தபடியே தூங்கிய ஓட்டுநர் 

டெஸ்லா காரை ஒட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர், கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில் நடந்துள்ளது இந்த சம்பவம். டெஸ்லா காரில் ஓட்டுநரும் அவருடன் மற்றொருவரும் அமர்ந்து பயணித்துள்ளனர். ஓட்டுநருக்கு அருகே இருந்த நபர் அயர்ந்து தூங்கியுள்ளார். கார் மணிக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அருகிலிருந்த நபர் தூங்கவும், ஓட்டுநருக்கு லைட்டா தூக்கம் வர ஆரம்பித்துள்ளது. உடனே ஸ்டியரிங்கிலிருந்து கையை எடுத்தபடி தூங்கியுள்ளார். டெஸ்லா எஸ்.யூ. வி. ரக கார்கள் ஆட்டோமேட்டிக் பைலட் சிஸ்டத்தை கொண்டுள்ளவை… எனவே ஸ்டியரிங்கை தொடாமல் சிறிது நேரம் பயணித்துள்ளது. இந்த வீடியோவை சாலையில் மற்றொரு காரில் சென்றுகொண்டிருந்த டகோட்டா ராண்டால் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இந்த வீடியோ போலியானது என்றும், டெஸ்லா மாடல் கார்களில் ஸ்டியரிங்கை 30 வினாடிக்கு ஒருமுறை ஓட்டுநர்கள் செயல்படுத்த வேண்டும் என எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டெஸ்லாவின் வாகன பாதுகாப்பு அறிக்கையின்படி, ஆட்டோமேட்டிக் பைலட் சிஸ்டத்தை பயன்படுத்தி காரை இயக்குபவர்கள் விபத்தை சந்தித்தது இல்லை என்றும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.