கார்ப்பரேட் சலுகையை ரத்து செய்தால் ரூ.1.5 லட்சம் கோடி கிடைக்கும்! – மதுரை எம்.பி சொல்கிறார்

 

கார்ப்பரேட் சலுகையை ரத்து செய்தால் ரூ.1.5 லட்சம் கோடி கிடைக்கும்! – மதுரை எம்.பி சொல்கிறார்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய சலுகைகளை ரத்து செய்தாலே அரசுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வதற்கு பல எம்.பி-க்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

mp-venkatesan.jpg

இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு இன்றைக்கு தேவை அதிகாரப்பரவல் தானே தவிர, அதிகாரக் குவியல் இல்லை. மத்திய அரசுக்கு இன்றைக்கு நிதித்தேவை என்றால் அந்த நிதியை எங்கிருந்து உருவாக்க வேண்டும்? 
கார்ப்பரேட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒரு சதவிகிதம் கூட்டினாலே 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். அல்லது கடந்த ஆண்டு கார்ப்பரேட்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகையை ரத்து செய்தால், தேசத்தின் நலன் கருதி ரத்து செய்தால் ரூ.1,50,000 கோடி ரூபாய் கிடைக்கும். நிதியை திரட்ட வேண்டிய இடம் அதுதான். அதற்கு பதிலாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்தால் உள்ளூர் அளவில், உள் மட்ட அளவில் நடக்கக் கூடிய பல வேலைகள் சீர்குலையும்” என்று கூறினார்.