கார்த்தி, விஷாலுக்கு ‘அந்த’ லிஸ்ட்ல இடமே இல்லையாம்!

 

கார்த்தி, விஷாலுக்கு ‘அந்த’ லிஸ்ட்ல இடமே இல்லையாம்!

நடிகர் சங்கம் – தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் – தியேட்டர்காரர்கள் சங்கம் என எந்த பிரச்னை என்றாலும் அங்கே முட்டிக்கொண்டு நிற்பது விஷால் என்பதால், அவரை சிறுமைப்படுத்தும்விதமாக சிம்புவிற்கு பி கேட்டகிரியில் இடமளித்து விஷாலையும் கார்த்தியையும் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக்கியிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள் என்பது விஷால் தரப்பு வாதம். இருக்கு, நாளைக்கு விஷால் கிட்டேர்ந்து ஒரு காரசாரமான பேட்டி கண்டிப்பா இருக்கு!

நடிகர் சங்க செயலரு, தயாரிப்பாளர் சங்க தலைவரு, விரைவில் புது மாப்பிள்ளை என ஏகப்பட்ட போஸ்ட்டிங்குகளை வச்சுக்கிட்டு தமிழ் சினிமாவை தலைநிமிர வைக்க விஷால் அலையிறாரு, அவரைபோய் மூணாவது கேட்டகிரியில சேத்துட்டாங்கப்பா! விஷயம் என்னன்னா, தமிழ்நாடு திரையரங்குகள் எல்லாம் நஷ்டத்துல போகுதாம். ஜி.எஸ்.டி., 18% பஞ்சாயத்து வரி 8%ன்னு வரிகட்டியே அவங்களால சமாளிக்க முடியலையாம். இதுல தயாரிப்பாளர் பங்கா, 75% குடுத்து கட்டுப்படி ஆகமாட்டேங்குது. ஆகையால், இனிமே 75% எல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்லி,  மல்ட்டிஃபிளெக்ஸ் மற்றும் சாதாரணம்னு எல்லா தியேட்டர்களையும் ரெண்டு கேட்டகிரியா பிரிச்சு ஒரு லிஸ்ட் ஒருபக்கம் வச்சுக்கிட்டாங்க.

Rajini Ajith Vijay

இன்னொரு பக்கம், உச்ச நடிகர்கள், ஓரளவு நடிகர்கள், அப்புறம் நடிகர்கள் அப்படீன்னு நடிகர்களையும் தரம் பிரிச்சுட்டாங்க. இதுல உச்ச நடிகர்கள் கேட்டகிரியில் ரஜினி, அஜீத், விஜய்னு மூணு பேரை மட்டும் வச்சிருக்காங்க தியேட்டர் அதிபர்கள். சரி, அடுத்த கேட்டகிரியில் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாத்தா, சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதின்னு ஆறு பேரோட சுருக்கிட்டாங்க‌. மூணாவது கேட்டகிரியை ரொம்ப சிம்ப்ளா மற்ற நடிகர்கள்னு முடிச்சுக்கிட்டாங்க. இந்த ‘மற்ற நடிகர்கள்’ கேட்டகிரியிலதான் கார்த்தி, விஷால் முதற்கொண்டு மற்ற எல்லாரும் வருவாங்க.

Vishal Karthi

இதுல ஏ கேட்டகிரி நடிகர்களின் படமாக இருந்தால், மல்ட்டிஃபிளெக்ஸ் தியேட்டர்கள் 60%, மற்றவை 65% எனவும், பி கேட்டகிரி நடிகர்களின் படங்க‌ளுக்கு 55%, 60% முறையேவும், மற்ற நடிகர்களின் படங்க‌ளுக்கு 50% மட்டுமே பங்களிப்பது என தியேட்டர் அதிபர்கள் முடிவுசெய்திருப்பதாக, ஒரு ‘ரகசிய அறிக்கை’ ஆன்லைனில் சுற்றுகிறது. தியேட்டர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் “ஆன்லைனில் சுற்றிவரும் அந்த சுற்றறிக்கை உண்மையானதுதான், ஆனா அது ரகசியமாச்சே, உங்களுக்கு எப்புடி கிடைச்சது” என அப்பாவியாக கேட்கிறார்.

Theater association memo

நடிகர் சங்கம் – தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் – தியேட்டர்காரர்கள் சங்கம் என எந்த பிரச்னை என்றாலும் அங்கே முட்டிக்கொண்டு நிற்பது விஷால் என்ற ஒற்றைப்புள்ளியில்தான். எனவே, அவரை சிறுமைப்படுத்தும்விதமாக சிம்புவிற்கு பி கேட்டகிரியில் இடமளித்து விஷாலையும் கார்த்தியையும் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக்கியிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள் என்பது விஷால் தரப்பு வாதம். இருக்கு, நாளைக்கு விஷால் கிட்டேர்ந்து ஒரு காரசாரமான பேட்டி கண்டிப்பா இருக்கு!