கார்த்தி- ராஷ்மிகா படத்தின் தலைப்பு இது தானா?

 

கார்த்தி- ராஷ்மிகா படத்தின் தலைப்பு இது தானா?

கார்த்தி- ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: கார்த்தி- ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ‘கைதி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்  `ரெமோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்கிய ராஜ் கண்ணன் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். மேலும் அவர் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது, என்பதால் அவரின் ரசிகர்கள் பெரிதும் இந்தப் படத்தை எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில்படத்தின் தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், தற்போது படத்திற்கு `சுல்தான்’ எனத் தலைப்பிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

karthi

மேலும் இது குறித்த அடர்த்திகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.