கார்த்திகை மாத விசேஷ தினங்கள் 

 

கார்த்திகை மாத விசேஷ தினங்கள் 

கார்த்திகை மாத முக்கிய பண்டிகைகள் பற்றியும் அதன் முக்கியத்துவங்கள் பற்றியும் பார்போம்.

கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவன் மற்றும் விஷ்ணு பூஜைகள் செய்வதும் வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும் குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன. 

kaarthikai

கார்மேகம், சோனை மழை பொழியும் மாதம் கார்த்திகை.மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சியளித்த மாதம் கார்த்திகை. கடும் தவமிருந்து அன்னை பார்வதி தேவி சிவபெருமானின் திருமேனியில் இட பாகத்தைப் பெற்றதும் கார்த்திகை மாதத்தில்தான்.

திருவண்ணாமலை மகா தீபம், கார்த்திகை பௌர்ணமி என்று விசேஷங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம் ஆகும். கார்த்திகை பௌர்ணமி விழாவில் ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

karthigai

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் சார்த்தி இருப்பார். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை விரதம் :

நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

karthigai

ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது.

அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்! 

19.11.18 கார்த்திகை துவாதசி விரதம் :

கார்த்திகை மாத துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர்.

garudanhjk

கார்த்திகை மாத துவாதசி அன்னதானம் செய்த உகந்த நாள் ஆகும் . துவாதசியன்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானமிட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 

20.11.18 திருவண்ணாமலை தேரோட்டம்:

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. விருச்சிக லக்கினத்தில் தேரோட்டம் தொடங்குகிறது.

21.11.18 மிலாடி நபி :

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித நாள் ’மிலாடி நபி’. இன்று மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெறும். 

22.11.18 பௌர்ணமி :

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சி அளித்த நாள், கார்த்திகை பௌர்ணமி தினமாகும்.

powrnami

ஜோதிப் பிழம்பே மலையாக எழுந்தருளும் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம். 

23.11.2018 கார்த்திகை மகாதீபம் :

அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூப மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நாளில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். 

24.11.18 வாஸ்து நாள் :

vasthu

வாஸ்து பகவான் உறக்கத்திலிருந்து எழும் நாளில் பூமி பூஜை செய்து கட்டுமானத்தை தொடங்குவது சிறப்பாக இருக்கும். வாஸ்து தினமான இன்று காலை மணி 10.54 முதல் 11.30 வரை பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். 

6.12.18 கார்த்திகை மாத  அமாவாசை :

பித்ரு பூஜை செய்வதற்கு உகந்த தினம் அமாவாசை நாள். பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இறந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் அருளும் ஆசியும் கிடைக்கும். வாழ்க்கையும் வளமாக அமையும். 

8.12.18 தேவமாதா கருவுற்ற திருநாள் :

ஏசுவின் தாயான தேவமாதா கருவுற்ற திருநாள் இன்று. இன்றைய நாளில் அனைத்து தேவாலயங்களிலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். மாலை நேரத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறும்.