கார்த்திகை மாத தனுசு ராசி பலன்கள் 

 

கார்த்திகை மாத தனுசு ராசி பலன்கள் 

தனுசு ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் கார்த்திகை மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

தனுசு ராசிக்கு இந்த மாதத்தின் முற்பாதியில் ராசியில் சூரியனும்,புதனும்,சுக்கிரனும் 11ல் வீற்று இருக்கின்றனர். மேலும் ராசியில் சனியும் , 8 ல்ராகுவும், 2ல் கேதுவும், 12 ல் குருவும்,3ல் செவ்வாய் பகவானும் வீற்று இருக்கின்றனர்.

guru

 கல்விக்காரகரான புதன் தற்போது வக்கிரம் அடைந்து துலாமில் இருக்கிறார். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

புதிய முயற்சி வெற்றி பெறும். டிச.8 ல் 12-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுகிறார். அங்கு புதனால் எதிரி தொல்லை வரலாம். 

உங்களின் முயற்சிகளில் தடைகளைச் சந்திக்கும் நிலை உருவாகலாம்.உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியதிருக்கும்.

சூரியன் 12-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால் பணியில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டுபிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். 

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.பிள்ளைகள் வழியில் பெருமைப்படத் தக்க செய்திகளைக் கேட்பீர்கள். 

thanusu

திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், சூரியன், குரு, சனி, மற்றும் சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மாதப் பிற்பகு தியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

சிலருக்குப் பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

sakthi

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் கிடைக்கும். 

மாணவ மாணவியர்க்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டுப் படித்தால் தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

thanusu

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். 

தனுசு லக்ன பலன்கள் : சுப விரைய செலவுகள் உண்டாகும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மூலம் நட்சத்திரம் : உடல் நிலையில் கவனம்.

பூராடம் நட்சத்திரம் : சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் 

உத்திராடம் நட்சத்திரம் : வீடு மனை யோகம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:  நவம்பர்: 27, 28

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9

அதிர்ஷ்டகிழமைகள் : ஞாயிறு , செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள்

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் மாலையினை விநாயகருக்கு அணிவிப்பதும் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்வதும் அற்புதமான பரிகாரம் ஆகும்.