கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது ஏன் ?

 

கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது ஏன் ?

கார்த்திகை மாத சோம வாரத்தில் சங்காபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்போம்.

கார்த்திகை மாதம் சோமவாரத்தில் சங்காபிஷேக வைபவம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் பல்வேறு சிவன் கோயில்களில் நடைபெறுவது வழக்கம்.

sangabisekam

அதே போல் இந்தாண்டிற்கான கார்த்திகை மாத மூன்றாவது சோமவார சங்காபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி  தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது .

சங்கு செல்வத்தின் அடையாளம் ஆகும் . மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கள்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது. சோமவாரத்தன்று மாலை வேளையில் சிவன் சந்நிதிக்கு முன்பாக 54, 108, 60, 64 வரிசைகளில் சாதாரண அபிஷேக சங்குகளை வைப்பர்.

தலைவாழை இலையில் அரிசி போட்டு, தர்ப்பைப் புல் வைத்து சங்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

siva

இந்தச் சாதாரண சங்குகளின் நடுவில் ஒரு தட்டில் சிவப்பு நிறத் துணியில் மிகப்பெரிய வலம்புரிச் சங்கை வைத்து, நீர் விட்டு, வாசனை திரவியங்கள் போட்டு அருகில் சிவபெருமானைக் கலசத்தில் வர்ணிக்க வேண்டும். அதன் பின்னர் சிவனுக்கு உண்டான மந்திரங்கள் முழங்க ஆராதனைகள் நடைபெறும் . 

சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.

sangabisekam

ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை ஆகும். கார்த்திகை சோமவாரத்தில் சிவனை வழிபாடு செய்வது சகல நன்மைகளையும் தரும்.