கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

 

கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

ஒவ்வொரு வருடமும் சபரிமலையில் நடை பெறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

sabarimalai

இந்தாண்டிற்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதியும் , மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடைபெற உள்ளதால் கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று

இந்தியா முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் அருகில் உள்ள ஐயப்பன் கோயில்களுக்கு சென்று மாலை அணிவித்து தங்களது விரதத்தை  தொடங்கினர்.

ஐயப்ப பக்தர்கள்இன்று காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 

 தமிழ் நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில்களான சென்னை மகாலிங்கபுரம் மற்றும் கே.கே நகர் ஐயப்பன் கோயில் மற்றும் கன்னியாகுமரி ஐய்யப்பன் கோயில்கள் 

ayyappan

மற்றும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில்களில் சபரிமலை செல்லும் பக்தர்கள், இன்று காலை கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர்.

ayyappan

அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.  பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார்கள். நீலம், கருப்பு நிற உடை அணிந்து அவர்கள் கோயிலினை வலம் வந்தனர். 

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு அருகில் உள்ள ஐய்யப்பன் கோயில்களில் சாமி தரிசனம் செய்வார்கள்.

ஏராளமான பக்தர்கள் கோயில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்து செல்பவர்கள் கன்னி சாமிகள் ஆவார்கள்.

ayyappan

கன்னிசாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு நேற்றைய தினம் கடைகளில் குவிந்திருந்தனர்.