“கார்க்கி காலேஜ் பொண்ண கைய புடிச்சி இழுத்தியா? -என்ன கைய புடிச்சி இழுத்தியா?”- வன்கொடுமை விசாரணையில் 10பேர் கைது.. 

“கார்க்கி காலேஜ் பொண்ண கைய புடிச்சி இழுத்தியா? -என்ன கைய புடிச்சி இழுத்தியா?”- வன்கொடுமை விசாரணையில் 10பேர் கைது.. 

பிப்ரவரி 6 ஆம் தேதி கார்க்கி பெண்கள் கல்லூரி ஆண்டுவிழாவில் அத்துமீறி  கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  பல்கலைக்கழக மாணவிகள் குற்றம் சாட்டினர். திங்கள்கிழமை பிற்பகல், மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து போலீஸ்  அதிகாரிகளால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரி மாணவிகளை  பாலியல் துன்புறுத்தல் செய்தது  தொடர்பாக புதன்கிழமை  10 பேர் கைது செய்யப்பட்டனர். 

பிப்ரவரி 6 ஆம் தேதி கார்க்கி பெண்கள் கல்லூரி ஆண்டுவிழாவில் அத்துமீறி  கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  பல்கலைக்கழக மாணவிகள் குற்றம் சாட்டினர். திங்கள்கிழமை பிற்பகல், மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து போலீஸ்  அதிகாரிகளால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

gargi-college

திங்களன்று, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த கல்லூரி  வளாகத்திற்கு விஜயம் செய்தார். அவர்களோடு நடந்த  விசாரணைக்கு பிறகு  கல்லூரி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது .

இந்த வழக்கை கூடுதல் மாவட்ட டி.சி.பி (தெற்கு) கீதாஞ்சலி கண்டேல்வாலின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரதிபா சர்மா விசாரித்து வருகிறார். குற்றம் புரிந்த சில சந்தேக நபர்களை பிடிப்பது  தொடர்பாக 11 க்கும் மேற்பட்ட போலீஸ் குழு  இந்த வழக்கை விசாரித்து டெல்லியில்  பல்வேறு இடங்களை  பார்வையிடுகின்றன.ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் ஐபிசியின் 452, 354, 509, 34 பிரிவுகளின் கீழ் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  சிபிஐ விசாரணையை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. எம் எல் ஷர்மா தாக்கல் செய்த மனுவில் , கல்லூரி வளாகத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களிலிருந்து அனைத்து வீடியோ பதிவுகளையும் காட்சிகளையும் பறிமுதல் செய்ய  உத்தரவிட கோரியுள்ளது.