காரைக்காலில் உள்ள புறவழிச்சாலைக்கு  “கலைஞர்” பெயர்! அசத்தும் புதுச்சேரி அரசு 

 

காரைக்காலில் உள்ள புறவழிச்சாலைக்கு  “கலைஞர்” பெயர்! அசத்தும் புதுச்சேரி அரசு 

காரைக்காலில் புறவழிச்சாலைக்கு கலைஞர் பெயர் வைக்க அம்மாநில ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். 

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். 

Kiranbedi

இந்த நிலையில் இது தொடர்பான கோப்பு பொதுப்பணித்துறை சார்பில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோப்பிற்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதியளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான கடலூர்-சென்னை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கவும் ஆளுநர் கிரண்பேடி அனுமதியளித்துள்ளார்.