காரில் வர யோசித்த நடிகர் விஜய்…ஹெலிகாப்டரை கொண்டு வந்து நிறுத்திய தயாரிப்பாளர்; அடேங்கப்பா வாடகை இம்புட்டா!

 

காரில் வர யோசித்த நடிகர் விஜய்…ஹெலிகாப்டரை  கொண்டு வந்து நிறுத்திய தயாரிப்பாளர்;  அடேங்கப்பா வாடகை இம்புட்டா!

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படமான மாஸ்டர் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

 

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் இரண்டு கட்ட  படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம்  கட்டப்படப்பிடிப்பு கர்நாடகா ஹிமோகாவில் பெரிய சிறைச்சாலை போன்று செட் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.  இருப்பினும் அங்கு ஒரு வியக்க வைக்கும் விவகாரம் ஒன்று நடந்துள்ளது.

ttn

அதாவது 10 நாட்களுக்கு முன்பு விஜய் மற்றும் படக்குழுவினர்  மைசூர் அருகில் ஷூட்டிங் நடைபெற்ற ஹிமோகாவிலிருந்து கிளம்பலாம் என்று முடிவெடுத்துள்ளனர். காரில் பயணம் செய்தால்  ஹிமோகாவிலிருந்து பெங்களூர் வர 350 கிமீ தூரமும், அங்கிருந்து ஏர்போர்ட் வர 250 கிமீ தூரமும், அங்கிருந்து சென்னைக்கு வர 450 கிமீ என மொத்தம்  1500கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததாம். இதனால் விஜய் சற்று யோசித்து நிற்க,  படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அதிரடியாக ஒரு முடிவெடுத்தாராம்.

ttn

அது என்ன தெரியுமா? ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.  மதியம் 12.30 மணிக்கு அங்கு வந்த ஹெலிகாப்டரில் விஜய், இயக்குநர்  லோகேஷ் கனகராஜ், இரண்டு உதவி இயக்குநர்கள்  என 4 பேர் பயணம் செய்துள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு ஹெலிகாப்டர் சென்னையை வந்து சேர்ந்துள்ளது.  இந்த திடீர் ஹெலிகாப்டர் பயணத்திற்கு மட்டும் சுமார் 15 லட்சம் செலவானதாம். 

ttn

பெரிய நடிகர்களை  வைத்து படம் பண்ணினாலே அவர்களை தாஜா செய்ய கோடிக்கணக்கில் சம்பளம், கேரவன் என பணத்தை தண்ணியாக தயாரிப்பாளர்கள் செலவழித்து வருவது வழக்கமானது தான். இருப்பினும்  கார் பயணத்தை தவிர்க்க  ஹெலிகாப்டர் ஒன்றை வாடகை எடுத்து ஹீரோவை அலுங்காமல் அனுப்பி வைக்கும் இதுபோன்ற  தயாரிப்பாளர்களை என்னவென்று சொல்வது…!