காரில் கதறிய காதல் ஜோடி… போலீசை துரத்திவந்த இளைஞர்கள்… விழுப்புரத்தில் பரபரப்பு!

 

காரில் கதறிய காதல் ஜோடி… போலீசை துரத்திவந்த இளைஞர்கள்… விழுப்புரத்தில் பரபரப்பு!

விழுப்புரத்தில் போலீசாருடன் சேர்ந்து காதல் ஜோடியைக் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வி.காலனியைச் சேர்ந்தவர் விமல். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு சேலம் மாவட்டம் சின்ன சீரகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

விழுப்புரத்தில் போலீசாருடன் சேர்ந்து காதல் ஜோடியைக் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வி.காலனியைச் சேர்ந்தவர் விமல். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு சேலம் மாவட்டம் சின்ன சீரகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கிருத்திகாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், காதல் ஜோடிகள் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். 

lovers

இதனால், தங்கள் மகள் கிருத்திகாவை விமல் கடத்திவிட்டதாக ஆட்டையாம்பட்டி போலீசில் கிருத்திகாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் இறங்கிய போலீசார், கிருத்திகா – விமல் எங்கு உள்ளனர் என்று விசாரணை நடத்தி இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். பின்னர், வானூர் போலீசார் உதவியுடன் வி.அகரத்தில் உள்ள விமல் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இவர்களுடன் கிருத்திகாவின் உறவினரும் வந்துள்ளார். இருவரிடமும் அங்கேயே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சான்றிதழைக் காட்டியுள்ளனர். ஆனாலும் போலீசார் விடவில்லை. இருவரையும் கட்டாயப்படுத்தி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயற்சிசெய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், போலீஸ் வாகனத்தில் வராமல், ஆளுங்கட்சி கொடி கட்டிய வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். இதனால், காதல் ஜோடிகள் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், போலீசாரிடம் தகவல் கேட்டுள்ளனர்.

police

ஆனால், அவர்களுக்கு சரியான பதிலை அளிக்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு வேகவேகமா புறப்பட்டுள்ளனர். இதனால் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர். வேறு வழியின்றி வாகனம் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள், விமலின் பெற்றோர், கிருத்திகாவின் பெற்றோர் என்று பலரும் கூடி பிரச்னை செய்யவே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

police

உடனடியாக உதவி காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் என்ன பிரச்னை என்று விசாரித்துள்ளார். அப்போது, சேலம் ஆட்டையாம்பட்டி போலீசார் தங்களை வலுக்கட்டாயமாக அழைத்து செல்வதாக காதல் ஜோடி கண்ணீர்விட்டு அழுதுள்ளது. தங்கள் மகளை கடத்திவிட்டதாக கிருத்திகாவின் பெற்றோரும் அழுதுள்ளனர். இதையடுத்து சேலம் ஆட்டயாம்பட்டி போலீசை தொடர்புகொண்டு உண்மை விவரத்தை விசாரித்துள்ளார் சரவணகுமார். அப்போது, கிருத்திகாவின் பெற்றோர் புகார் அளித்ததாகவும் ஆனால், வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர். வழக்குப் பதிவு செய்யாமல் பெண்ணை அழைத்துச் செல்வது தவறான செயல் என்பதை உணர்ந்த அவர், காவலர்களை எச்சரித்து வெளியேற்றினார்.
பின்னர், காதல் ஜோடி தங்களின் திருமண சான்றிதழ் உள்ளிட்டவற்றைக் காட்டி விரும்பி திருமணம் செய்துகொண்டோம் என்று எழுதிக்கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் விமலுடன் கிருத்திகா செல்ல போலீசார் அனுமதித்தனர்.

parents

கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த பெண், தங்கள் சொல் பேச்சை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு செல்கிறாரே என்ற வருத்தத்தில் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் வகையிலிருந்தது. போலீசார் துணையுடன் காதல் ஜோடி கடத்தப்பட இருந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.