காய்ச்சலுக்காக வந்த பெண்ணுக்கு வயிற்று வலி இலவசம்…காலாவதியான மாத்திரையால் நடந்த விபரீதம்!

 

காய்ச்சலுக்காக வந்த  பெண்ணுக்கு வயிற்று வலி இலவசம்…காலாவதியான மாத்திரையால்  நடந்த விபரீதம்!

வேறு புதிய மாத்திரைகளை கொடுத்தனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அங்கிருந்த மற்ற நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கடந்த 16ஆம் தேதி 35 வயது பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அந்த பெண்ணின் உடலில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி மாத்திரை கொடுத்துள்ளார். மாத்திரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்ற அந்த பெண் மாத்திரை உட்கொண்டபின் அவருக்கு காய்ச்சலோடு சேர்ந்து வயிற்றுவலியும் ஏற்பட்டுள்ளது.

ttn

இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு இருந்த செவிலியரிடம் விஷயத்தை சொல்ல அவர் மாத்திரையை வாங்கி பார்த்தபோது அது காலாவதியானது  தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் வேறு புதிய மாத்திரைகளை கொடுத்தனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அங்கிருந்த மற்ற நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

ttn

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவர்,  ‘காலாவதியான மாத்திரை 5 அட்டைகள் இருப்பில் இருந்துள்ளது. இதில் ஒரு அட்டை அந்த பெண்ணுக்கு தரப்பட்டுள்ளது. தற்போது அந்த மாத்திரைகள் அழிக்கப்பட்டு விட்டன. இனி இதுபோன்ற தவறு நடக்காது’ என்றார். இருப்பினும் இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.