காய்ச்சலில் இருந்து காப்பாற்றும் காஞ்சி சிவன்.

 

காய்ச்சலில் இருந்து காப்பாற்றும் காஞ்சி சிவன்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த அதிசயக் கோவில்.பெயர் ஐராவதேஸ்வரர் கோவில்,இங்கிருக்கும் சிவனுக்கு ஒரு சிறப்புப் பெயர் இருக்கிறது, அது ” ஜுரஹரேஸ்வரர்”!

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த அதிசயக் கோவில்.பெயர் ஐராவதேஸ்வரர் கோவில்,இங்கிருக்கும் சிவனுக்கு ஒரு சிறப்புப் பெயர் இருக்கிறது, அது ” ஜுரஹரேஸ்வரர்”!.அதற்குப் பின்னால் ஒரு புராணக்கதை இருக்கிறது. தாரகன் என்கிற அசுரன் சிவனை நோக்கி கடும் தவம் செய்து, சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணமில்லை என்கிற வரத்தைப் பெறுகிறான்.

airavadeswara

அதைத்தொடர்ந்து மூவுலகிலும் இருக்கு உயிர்கள் அனைத்தையும் துண்புறுத்தத் தொடங்கினான்.இதனைத் தாங்கமுடியாத தேவர்கள் சிவனை அனுகி முறையிட்டார்கள்.ஆனால் அவரோ நிஷ்டையில் இருந்தார்.அந்த நிஷ்டையை கலைக்க வேண்டும் என்று தேவர்கள் மன்மதனை அனுப்பி வைத்தனர்.அவனும் ஈசன்மீது பஞ்ச மலர்கணைகளைத் தொடுத்தான்.

sivan-temple-89

இதனால் கோபமடைந்த சிவன் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்துக் கொன்றார்.மறுபடி  தேவர்கள் வந்து சிவனைத் தொழுது தாரகன் என்கிற அசுரனைப் பற்றிச் சொல்லி அழ,அவர் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஒரு பொறியை எடுத்து அக்கினியிடம் தந்தார்.அந்த பொறின் வெப்பத்தால் தேவர்கள் அனைவருக்கும் கடும் ஜூரம் வந்து துண்பப்பட்டார்கள்.அவர்களை காஞ்சியில் உள்ள இந்தக் கோவில் பற்றி சொல்லி அங்கே போய் வழிபடுங்கள் என்றாராம். அதைத்தொடர்ந்து அவர்களின் ஜுரமெல்லாம் தனிந்து விட்டதாம்.இந்தக் கோவில் ஏகாம்பரதர்,காமாட்சி,வரதராஜன் போன்ற பிரமாண்ட கோவில் களை வணங்கியபின் இந்தக் கோவிலுக்குள் போகத்தோன்றுவதில்லை மக்களுக்கு.ஆனால் இந்தக்கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிசம்.

airavatheswar-78

காஞ்சி கைலாசநாதர் கோவிலையும்,மாமல்லபுரம் சிற்பத்தொகுதி ஆகியவற்றை உருவாக்கிய ராஜசிம்ம பல்லவன் கைவண்ணம் இது.ஸ்ரீரங்கம் கோவில் பாணியில் பிரணவாகார வகை விமானம் அமையப்பெற்ற கோவில் இது.தீராத ஜுரத்துக்கு இங்கு வந்து வழிபட்டால் உடனடியாக நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.தினமும் இரண்டு வேளை பூஜை நடைபெறும். காலை 8 மணிமுதல் 11 மணிவரையும்,மாலை 5 மணிமுதல் 7 மணிவரையும் தரிசனம் செய்யலாம்.சிவனுக்கு வஸ்த்திரம் வாங்கி சமர்ப்பிப்பது இந்த கோவிலின் வழக்கம்.