காய்கறி வடை எப்படி செய்வது?

 

காய்கறி வடை எப்படி செய்வது?

சுவையான காய்கறி வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

மசால் வடை,உழுந்து வடை,போண்டா என வடைகளில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன.ஆனால் ,சில வடைகள் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.பிறகு உடலுக்கு உபத்திரம் கொடுக்கும்.எப்போதும் வயித்துக்கு கேடு செய்யாத ஐட்டங்கள் சில வகைகள் மட்டுமே! அப்படி ஒன்றுதான் காய்கறி வடை .சுவையான காய்கறி வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

vegetable vadai

தேவையான பொருட்கள்:

உளுந்து -1 உழக்கு 
கேரட்- 1
பீன்ஸ் – 4
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளாகாய் – 2
கருவேப்பிலை -1 ஆர்க்கு 
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு 

செய்முறை:

kaikari vadai

உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணிர் வடித்துவிட்டு, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும். காய்கள், பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அரைத்து வைத்த பருப்பில் பொடியாக நறுக்கிய காய்கள், வெங்காயம், கருவேப்பிலை போட்டு சேர்த்து பிசையவும். இக் கலவையை காய்ந்த எண்ணெய்யில் போட்டு சிவந்த பின் எடுக்கவும்.

சுவையான காய்கறி வடை தயார்..