காய்கறி சந்தைகளில் ரசாயன கலவையில் காய்கறிகள்! டன் கணக்கில் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

காய்கறி சந்தைகளில் ரசாயன கலவையில் காய்கறிகள்! டன் கணக்கில் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

தமிழகத்தில் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகவும், ரசாயன கலவை தமிழகத்தில் தான் பாலில் அதிகளவில் கலப்படம் செய்யப்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகளிலும், பழ வகைகளிலும் ரசாயனங்கள் அதிகளவில் கலக்கப்படுவதும், செயற்கையான முறைகளில் பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

koyambedu market

சென்னையையும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள காய்கறி விற்பனையாளர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ரசாயானங்கள் கலக்கப்பட்ட காய்கறிகளும், பழங்களும் சென்னை நகர் முழுவதும் விற்பனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் செயற்கை நிறங்களை ஏற்றி விற்பனை செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

vegetables

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சுமார் 75 கடைகளில் இப்படி திடீரென நடத்தப்பட்ட சோதனையில், 2 கடைகளில் தெளிப்பான்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2டன் வாழைப்பழங்களைப் பறிமுதல் செய்தனர். அதே போல, செயற்கை நிறங்களை ரசாயனங்களின் உதவியுடன் பூசப்பட்ட 250 கிலோ பட்டாணி, 10கிலோ பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்திய கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கினார்கள்.