“காய்கறிகள் அவசரம்” என ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்த மினி லாரியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

 

“காய்கறிகள் அவசரம்” என ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்த மினி லாரியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ‘காய்கறிகள் அவசரம்’ என்று ஸ்டிக்கர் ஒட்டிய படி மினி லாரி ஒன்று வந்துள்ளது. 

ஊரடங்கு அமலில் இருப்பதால் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வாகனங்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ‘காய்கறிகள் அவசரம்’ என்று ஸ்டிக்கர் ஒட்டிய படி மினி லாரி ஒன்று வந்துள்ளது. 

ttn

அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்திய உடனே அதில் இருந்து டிரைவர் வண்டியில் இருந்து இறங்கி எஸ்கேப் ஆகியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வண்டியில் மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 24 மூட்டைகளில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தடைசெய்யபட்ட குட்கா இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு குட்காவை கொண்டு செல்வதும், இடையில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அத்தகைய ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை தேடி வருகின்றனர்.