காய்கறிகளை இப்படி வெச்சா சீக்கிரமா கெட்டுப் போகாது

 

காய்கறிகளை இப்படி வெச்சா சீக்கிரமா கெட்டுப் போகாது

உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் அருகருகே வைக்கக்  கூடாது.  அப்படி வைத்தால் இரண்டுமே சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.கிழங்கு வகைகளை எப்பொழுதும் மூடி வைக்கக் கூடாது.

தண்ணீருள்ள பாத்திரத்தில் வாழைக்காயை வைத்தால் ஒருவாரம் வரை வாழைக்காய் பழுக்காமல், கெடாமல், புத்தம் புதியதாக் தோற்றமளிக்கும். ஆனால் தண்ணீரை ஒவ்வொரு நாளும் மாற்றவேண்டும் .
உப்பு கரைத்த நீரில் போட்டு வைத்திருந்தால் எலுமிச்சம் பழம் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது மஞ்சள் தூள் தூவி சிறிது நேரம் மூடி வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் பச்சை நிறம் மாறாமலிருக்கும்.

உப்பு கரைத்த நீரில் ஊறப்போட்டு வைத்தால் தக்காளி பழங்கள் அழுகாமல் பல நாட்கள் இருக்கும். 
தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் இரண்டொரு நாட்கள் அழுகாமல் இருக்கும். தண்ணீரை மட்டும் அடிக்கடி மாற்ற வேண்டும்.வாழைக்காய்

உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் அருகருகே வைக்கக்  கூடாது.  அப்படி வைத்தால் இரண்டுமே சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.கிழங்கு வகைகளை எப்பொழுதும் மூடி வைக்கக் கூடாது.
கீரை வகைகள் எளிதில் வாடி போய் விடாமல் இருக்க, நீரில் நனைத்த காகிதத்தில் கீரைகளைச் சுற்றி வைக்கலாம். ப்ரெஷ்ஷாக இருக்கும்.

உப்புக் கரைத்த நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து, வேகவைத்தால், கிழங்கு வகைகள் சீக்கிரம் வெந்து விடும்.
காய்கறிகளை ஒரு கூடையில் போட்டு ஈரத் துணியால் மூடி வைத்தால், பல நாட்களுக்கு ப்ரெஷ்ஷாக இருக்கும். உருளைக்கிழங்கு
பச்சை மிளகாயை, காம்பு நீக்கி வைத்திருக்க வேண்டும். சீக்கிரம் கெட்டுப் போகாது.இஞ்சி, தேவையான அளவுக்கு மேல் இருந்தால், மண்ணில் புதைத்து தண்ணீர்  ஊற்றி வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். கெட்டுப் போகாது.