காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

 

காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தில் இருந்து ஒரு படி முன்னேறியுள்ளது

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான டேல் ஸ்டைன் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் இருந்தே தொடர்ந்து பல படுதோல்விகளை சந்தித்து வந்த விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஒரு வழியாக கடந்த கடந்த வாரத்தில் தான் வெற்றி பாதைக்கு திரும்பியது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தில் இருந்து ஒரு படி முன்னேறியுள்ளது.

dale steyn

இந்த நிலையில், கடந்த போட்டிகளில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த அசுர வேகப்பந்து பந்துவீச்சாளரான டேல் ஸ்டைன் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். 

தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக டேல் ஸ்டைன் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாகவும், ஸ்டைன் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும் பெங்களூர் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

dale steyn

பெங்களூர் அணியை மற்ற அணியின் பேட்ஸ்மேன்களிடம் இருந்து காப்பற்ற வந்த கடவுளாக பாரக்கப்பட்ட ஸ்டைனும் தற்பொழுது பெங்களூர் அணியில் இருந்து விலகியுள்ளது அந்த அணியின் ரசிகர்களை விரக்தியின் உச்சத்திற்கு தள்ளியுள்ளதை சமூக வலைதளங்கள் மூலமாக பார்க்க முடிகிறது.

இதையும் வாசிங்க

கிரவுண்டில் சிக்ஸ்… பெட்ரூமில் லிப்லாக் கிஸ்… தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..!