காயம் ஏற்படுத்திக்கொண்ட நிர்பயா குற்றவாளி! -தூக்குதண்டனை தள்ளிப்போகுமா?

 

காயம் ஏற்படுத்திக்கொண்ட நிர்பயா குற்றவாளி! -தூக்குதண்டனை தள்ளிப்போகுமா?

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதமே அவர்களுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற வினய் ஷர்மா சிறைச்சாலை சுவற்றின் மீது தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டார். இதனால் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதமே அவர்களுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். கடைசி நேர மனு, மேல் முறையீடு என்று தாமதமாகிக்கொண்டே செல்கிறது. மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

vinay-sharma-01

தூக்கிலிருந்து தப்பிக்க குற்றவாளி வினய் ஷர்மா புதிய யுத்தியைக் கையாண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள வினய் ஷர்மா, சிறை சுவற்றின் மீது தலையை மோதச் செய்து காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனால், சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தூக்கு தண்டனை கைதிக்கு தண்டனை நிறைவேற்றும்போது அவர் பூரண உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதன் அடிப்படையில் வினய் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் குறித்தபடி மார்ச் 3ம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.