காயத்ரி ரகுராமிற்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை : விசிக மகளிர் அமைப்பினர் கைது!

 

காயத்ரி ரகுராமிற்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை : விசிக மகளிர் அமைப்பினர் கைது!

இந்துக்களும் இவரை எங்கு கண்டாலும் செருப்பால் அடியுங்கள் என்று குறிப்பிட்டும் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், நான்  மோடிக்கு எதிராக பேசுவதைத் திரித்து நான் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று  அவதூறு பரப்புகிறார்கள். நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. என்னைப் பின்பற்றும் மக்களில் சுமார் 80% சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்று கூறியிருந்தார்.

gayathri ttn

இதுகுறித்து பாஜக ஆதரவாளரும் நடிகையுமான  காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், லைட்டா க்ளிசரின்  போடாமே சார்..நடிப்பு பத்தல என்றும் தனது மற்றொரு பதிவில், எல்லா இந்துக்களும் இவரை எங்கு கண்டாலும் செருப்பால் அடியுங்கள் என்று குறிப்பிட்டும் பதிவிட்டுள்ளார்.  மதவெறியைத் தூண்டும் வகையில் காயத்ரி ரகுராம் பேசியிருக்கும் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

vck

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

50ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காயத்ரிக்கு எதிராக கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.