காமெடி பன்றத்துக்கும் ஒரு அளவு வேணும்! இதுல பெருமை வேற… டாக்டர் குஷ்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

 

காமெடி பன்றத்துக்கும் ஒரு அளவு வேணும்! இதுல பெருமை வேற… டாக்டர் குஷ்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பதவி வகித்துவரும் நடிகை குஷ்பு, தற்போது சினிமா, சீரியல், அரசியல் என பல டாஸ்க்களை கையாண்டு வருகிறார்.

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பதவி வகித்துவரும் நடிகை குஷ்பு, தற்போது சினிமா, சீரியல், அரசியல் என பல டாஸ்க்களை கையாண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ உலக தமிழ்ப்  பல்கலைக்கழகம் அமெரிக்காவில்  Adult and Continuing Education பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாகவும், அதற்கான சான்றிதழையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

TTN

இந்நிலையில் நடிகை குஷ்பூ உலக தமிழ்ப்  பல்கலைக்கழகம் அமெரிக்காவில்  Adult and Continuing Education பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

TTN

இதனை கண்ட சமூகவலைதளவாசிகள், இந்த சான்றிதழ் போலியானது என்றும், முனைவர் பட்டம் பெற பி.எச்.டி படிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சாதனையை பாராட்டி அந்த பட்டத்தை வழங்க வேண்டும் என்றும் கூறி வருத்தெடுத்துக்கொண்டிருக்கின்றனர். குஷ்புவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முனைவர் பட்டம் ஒரு அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழத்தினுடையது. அது அந்த பல்கலைக்கழகத்தின் வலைதளத்திலேயே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட முனைவர் பட்டத்திற்கு இத்தனை அலப்பறை தேவைதானா என நெட்டிசன்கள் கிண்டலடித்துவருகின்றனர். படித்து முனைவர் பட்டம் பெற வேண்டும் அல்லது சமூதாயத்திற்கு தொண்டாற்றி கெளரவ முனைவர் பட்டம் பெற வேண்டும் என குஷ்புவுக்கு அட்வைஸும் வழங்கி வருகிறார்கள் குறும்புகார நெட்டிசன்கள்…