காமெடி நடிகர் செந்தில் வழியில் இளம் ஹீரோ! அதற்காக இப்படியா படுத்துவிங்க !?

 

காமெடி நடிகர் செந்தில் வழியில் இளம் ஹீரோ! அதற்காக இப்படியா படுத்துவிங்க !?

செந்தில் என்ன அட்வைஸ் பண்ணினார்?இந்த நடிகர் என்ன ஃபாலோ பண்ணுகிறார் என்றுதானே கேட்கிறீர்கள்.சினிமாவில் நடிக்க வந்தாச்சு. உங்களை தேடி புரட்யூசர் வந்தால் எந்தப் படத்தையும் வேணாம்னு சொல்லாதீங்க முன்னப்பின்ன சம்பளம் பேசத்தான் செய்வாங்க

காமெடி நடிகர் செந்தில்,படங்களில்தான் காமெடி நடிகர்,நிஜத்தில் அப்படியில்லை! வெள்ளந்தியாக இருந்தாலும் ரொம்பவே விவரமானவர். பிசியாக நடித்துக்கொண்டிருந்த காலங்களில் உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு அட்வைஸ் கொடுப்பார்.

அதை,அப்போது இருந்த நடிகர்கள் கடைப்பிடித்தார்களோ இல்லையோ இப்போது ஒரு இளம் ஹீரோ பக்காவாக பயன் படுத்துகிறார் என்று, அவர் ’படுத்துகிற’ கதையை சொல்கிறார்கள் கோடம்பாக்கம் ஏரியாவில்!

செந்தில் என்ன அட்வைஸ் பண்ணினார்?இந்த நடிகர் என்ன ஃபாலோ பண்ணுகிறார் என்றுதானே கேட்கிறீர்கள்.சினிமாவில் நடிக்க வந்தாச்சு. உங்களை தேடி புரட்யூசர் வந்தால் எந்தப் படத்தையும் வேணாம்னு சொல்லாதீங்க முன்னப்பின்ன சம்பளம் பேசத்தான் செய்வாங்க.அட்வான்ஸ் வாங்கிப் போட்டுக்கணும்.

நான்லாம் அந்த செக்கை வாங்கி ஒரு அக்கவுண்டுல போட்டுக்குவேன். அட்வான்ஸ் குடுத்த தயாரிப்பாளர் வந்து படம் ஆரம்பிச்சால் மறுபடியும் அந்த அட்வான்ஸ் பணத்தை மெயின் அக்கவுண்டுக்கு கொண்டு வந்துருவேன். வேரலேன்னா அப்படியே இருக்கும். அப்பிடி நடிக்காத படத்தில்தான் நான் முதல் முதலா வீடு வாங்கினேன் என்று சொல்லுவாராம்!

இந்த அட்வைஸைத்தான் நாம சொல்ற இளம் நடிகர் செஞ்சுக்கிட்டிருக்கிறார். கதை கேக்கிறதில்லையாம்!அப்படியே கேட்டு பிடிக்கலேன்னாலும் கதையில் சின்னதா சேஞ்சு பண்ணனும் அதெல்லாம் ஷூட்டிங் போறப்போ பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு முதலில் ‘பல்க்’காக அட்வான்ஸ் பணத்தை வாங்கி வச்சுக்குவாராம்.

அதுக்கப்புறம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்,இயக்குனர்,புரடக்சன் மேனேஜர் உட்பட ஒருத்தரும் ஹீரோவை சந்திக்க படுற பாடு இருக்கே,அதையே கதையாக்கி சீரியல் பண்ணினால் செமயா சில்லறை பார்த்திரலாம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பட தயாரிப்பாளர்கள் ! எல்லாம் சரி,யார் அந்த ஹீரோ!? என்று உங்கள் மைண்ட் கேட்பது எனக்கும் புரிகிறது.

இரண்டுது பெயர்.’வெற்றி’பெற வேண்டும் என்று லட்சிய வேட்கை கொண்டவர். லேட்டஸ்ட்டாக லவ்வில் பிரேக்கப் ஆனவர்.என்ன கண்ணு வேர்க்குதா? போங்க பாஸ்!