‘காமத்தின் மீது பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சி’: மீண்டும் சர்ச்சை கதையில் நடிக்கும் அமலா பால்

 

‘காமத்தின் மீது பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சி’: மீண்டும் சர்ச்சை கதையில் நடிக்கும் அமலா பால்

நான்கு வெவ்வேறு கதையம்சம் கொண்ட இந்த தொடரை இயக்குநர்கள் ரண் ஜோகர், அனுராக் காஷ்யப், திபகர் பேனர்ஜி, ஸோயா அக்தர் ஆகியோர் இயக்கினர்

சென்னை:  லஸ்ட்ஸ்டோரிஸ் திரைப்படத்தின்  தெலுங்கு பதிப்பில் நடிகை  அமலாபால்  நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் வெளியான ஆடை படத்தில் நடித்து பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் ஒரேசேர பெற்றவர் 
 நடிகை அமலா பால். காமத்தின் மீது பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சியை சொல்லும் படமாக அமைந்த லஸ்ட்ஸ்டோரிஸ்  வெப்சீரிஸ்  நெட்பிளிக்ஸ் ஸ்டீரிமிங் தளத்தில் கடந்தாண்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றது.  

amala

 

நான்கு வெவ்வேறு கதையம்சம் கொண்ட இந்த தொடரை இயக்குநர்கள் ரண் ஜோகர், அனுராக் காஷ்யப், திபகர் பேனர்ஜி, ஸோயா அக்தர் ஆகியோர் இயக்கினர். அதேபோல் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் இதில் நடித்து அசத்தினர். 

 

amala

இந்நிலையில் நான்கு வெவ்வேறு கதையம்சம் கொண்ட இந்த தொடர் தற்போது தெலுங்கில் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை நந்தின் ரெட்டி  இயக்குகிறார். இதில் ஒரு கதைக்கான பாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லஸ்ட்ஸ்டோரிஸ் வெப்சீரிஸில் பெற்றோர் கண்முன்னே சுய இன்பம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.