காமசூத்ராவில் 69 தெரியும், அதென்ன 669

 

காமசூத்ராவில் 69 தெரியும், அதென்ன 669

சீனாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான, அலிபாபா நிறுவனர் ஜாக் மா தன்னுடைய நிறுவன ஊழியர்கள் பணியில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு ஃபார்முலாவை வகுத்துள்ளார்.

சீனாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான, அலிபாபா நிறுவனர் ஜாக் மா தன்னுடைய நிறுவன ஊழியர்கள் பணியில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு ஃபார்முலாவை வகுத்துள்ளார்.  எளிமையாக புரிந்துகொள்வதற்காக 996 என்பது அதன் பெயர். அதாவது, ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணி முதல் மாலை 9 மணி வரை வாரத்தில் ஆறு நாட்கள் அலுவலக‌ வேலை செய்ய வேண்டும் என்பதுதான் சாராம்சம்.

alibaba

இப்போது அதனை சற்றே திருத்தி, தன் நிறுவன பணியாளர்களின் தனிப்பட்ட குடும்ப‌ வாழ்க்கைக்கு 669 என்ற புது ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்படி, ஒவ்வொரு ஊழியரும் வாரத்தில் 6 நாட்கள் , அதாவது வாரத்திற்கு ஆறு முறை தங்கள் இணையரோடு ‘இணையும்’ வீட்டு வேலை செய்ய‌ வேண்டும்.

வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அலுவலகத்தில் 12 மணி நேரம் அலுவலக வேலை செய்ய வேண்டும் என்ற முந்தைய 996 ஃபார்முலாவை பின்பற்றினால், வீட்டிற்கு சென்றவுடன் தூக்கம்தான் வரும். பிறகு எப்படி 669 ஃபார்முலாவை பின் தொடர்வது? ஜாக் மா சொல்வது செம்ம ஜோக் மா என நெட்டிசன்கள் தங்கள் கிண்டலை துவக்கிவிட்டன