காப்புரிமை வழக்குக்கு அனுமதி: பிகில் படத்துக்கு சிக்கல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

காப்புரிமை வழக்குக்கு அனுமதி:  பிகில் படத்துக்கு சிக்கல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது

பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர இயக்குநர் செல்வாவுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

bigil

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இதனிடையே   ‘பிகில்’  திரைப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர்  கே.பி. செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது அதனால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு வலியுறுத்த கே.பி.செல்வா தற்போது  சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த மனுவில்,’ 256 பக்கங்கள் கொண்ட கதையை  எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன். தற்போது என் கதையை திருடி பிகில்  திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். 

hc

 இதை ஏற்க மறுத்த அட்லீ தரப்பு, ‘கேபி செல்வா பணம் பறிக்கவும், விளம்பரத்திற்காகவும் தான் இந்த வழக்கை கடைசி நேரத்தில் தொடர்ந்துள்ளார்’ என்று கூறி விவாதித்தார். ஆனால்  இதை கேபி செல்வா தரப்போ மறுத்தது. இதையடுத்து இந்த இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. 

 

இந்நிலையில் பிகில் திரைப்படத்திற்குத் தடைகோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி,  பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு  உத்தரவிட்டார். ஒருவேளை செல்வா வழக்கு தொடர்ந்து அது நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டால், கண்டிப்பாக பிகில்  திரைப்படத்துக்குச் சிக்கல் உண்டாகும்.