‘காப்பான்’ படத்தின் ரன்னிங் டைம் இது தான்! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!

‘காப்பான்’ படத்தின் ரன்னிங் டைம் இது தான்! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படம் இம்மாதம் 20ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், ‘காப்பான்’ படத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அயன், மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான். காப்பான் திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

kaappaan stills

‘காப்பான்’ படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.   காப்பான் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில்,  தற்போது படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ‘காப்பான்’ திரைப்படம் 165 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்களாக இருக்கும் என்று வெளியாகியுள்ளது. மேலும் படத்துக்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் அளித்துள்ளனர்.  இதுவரையில் சூர்யா – கே.வி. ஆனந்த் கூட்டணியில் வெளியான படங்கள் பரபரப்புக்கும், சமூக அக்கறைக் கொண்ட காட்சிகளுக்கும் பெயர் போனாதால், இம்முறையும் இந்தக் கூட்டணியில் வெளியாகும் ‘காப்பான்’ படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் கே.வி.ஆனந்தின் படங்களுக்கு வழக்கமாக கதை, வசனங்களை எழுதும் எழுத்தாளர்கள் சுபா பணியாற்றாமல், பட்டுக்கோட்டை பிரபாகர் முதல் முறையாக கே.வி.ஆனந்துடன் இணைந்திருக்கிறார்.

kaappaan

துப்பறியும் கதைகளில் காதலைச் சுவாரஸ்யமாக சேர்க்கும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்திருப்பதால், காதல் காட்சிகளுக்கும் குறைவிருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தவிர, ‘காப்பான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது காதலை வளர்த்தார்கள். அதனால் சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு எப்படி காதலை வளர்க்க ஒரு படம் அமைந்ததோ, அதே போல் ஆர்யா, சாயிஷா ஜோடிக்கு இந்த படம் மறக்க முடியாத படமாக இருக்கும். லைகா புரொடக்‌ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.