‘காப்பான்’; அன்பான ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் கொடுத்த சூர்யா!

 

‘காப்பான்’; அன்பான ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் கொடுத்த சூர்யா!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 37’ திரைப்படத்திற்கு ‘காப்பான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12.10 மணிக்கு இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது.

சூர்யா 37 படத்தின் டைட்டிலை தேர்ந்தெடுக்க படக்குழு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டது. படத்திற்கு ஏற்ப 3 டைட்டில்களை ட்விட்டரில் பகிர்ந்த இயக்குநர் கே.வி.ஆனந்த், ரசிகர்களின் விருப்பத்தை கேட்டறிந்து, படத்திற்கு ஏற்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோவாக நடிக்கும் சூர்யா, பிரதமரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதியை முறியடித்து பிரதமரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை என கூறப்படுகிறது. இதில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார்.

suriya

சூர்யா, மோகன்லால், ஆர்யா, போமன் இராணி, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வரும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் லண்டனில் தொடங்கி இரண்டாவது கட்ட ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருவதாக கூறப்படுகிறது.