காப்பகத்தில் “பாது”காப்பின்றி சிறுமிகள் ! வேலியே பயிரை மேய்ந்த கதை !

காப்பகத்தில் “பாது”காப்பின்றி சிறுமிகள் ! வேலியே பயிரை மேய்ந்த கதை !

பெற்றோராலும், சமூகத்தாலும் ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவதற்காகத்தான் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுவது அனாதை, குழந்தைகள், முதியோர்கள் பாதுகாப்பகங்கள். சமூகம் நம்மை ஒதுக்கினாலும் இங்குதான் பாதுகாப்பு அதிகம் என கருதி ஏராளமானோர் இங்கு வசிக்கின்றனர். ஆனால் சமீப காலங்களில் இங்குதான் அதிக அளவில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக காப்பகத்தில் உள்ள சிறுமி கடந்த ஒரு ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் நடைபெற்றுள்ளது.

child abuse

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓட்டுனராக பணியாற்றி வரும் பசுபதி என்பவர் அங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒரு சிறுமியை மட்டும் கடந்த ஒரு ஆண்டாக மிரட்டி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த தகவல் தற்போது காப்பக நிர்வாகிக்கு தெரியவர அவர் பசுபதி என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பசுபதி மீது வழக்குப்பதிந்த ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

arrest

பின்னர் பசுபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஒரு வருடமாக கொலை மிரட்டல் விடுத்து தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.