காந்தி பிறந்தநாளுக்காக மாணவர்களுக்கு ‘சுய சரிதை’ புத்தகத்தை வழங்கும் பேராசிரியர்..

காந்தி பிறந்தநாளுக்காக மாணவர்களுக்கு ‘சுய சரிதை’ புத்தகத்தை வழங்கும் பேராசிரியர்..

புதுச்சேரி கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சம்பத் குமார், வாசகர் வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இளைய தலைமுறையிடம் புத்தக வாசிப்பை இடம் பெற வைக்க வேண்டும் என்ற புதிய முயற்சியில் ஈடு பட்டு வருகிறார். 

மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. காந்திக்கு அஞ்சலி செலுத்துவதோடு சேர்த்து அவரின் புகழ் இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் காந்தியின் ‘சுய சரிதை’ புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார் புதுச்சேரி பேராசிரியர் சம்பத் குமார்.

புதுச்சேரி கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சம்பத் குமார், வாசகர் வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இளைய தலைமுறையிடம் புத்தக வாசிப்பை இடம் பெற வைக்க வேண்டும் என்ற புதிய முயற்சியில் ஈடு பட்டு வருகிறார். 

Professor Sambath kumar

இது குறித்துப் பேசிய அவர், இளைய தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பைப் பழக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தான் நண்பர்களுடன் இணைந்து தலை சிறந்த நூல்களைப் புதுச்சேரி கடற்கரைக்கு வரும் இளைஞர்களுக்கு வழங்கி வருவதாகக் கூறியுள்ளார். மேலும், காந்தியடிகளை மிகவும் பிடிக்கும் என்பதால் அவருடைய சுய சரிதையையே வினாடி வினா போட்டி வைத்து அதில்  வெற்றி பெரும் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். 

எல்லாவற்றிற்கும் ஆன்லைன் என மாறி வரும் சூழ்நிலையில் புத்தக வாசிப்பு என்பது இல்லாத ஒன்றாக மாறி வருகிறது. இத்தகைய புதிய முயற்சிகள், இளைய சமுதாயத்தினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும் ஊன்றுகோலாக அமைகிறது.