காந்தி, அம்பேத்கர் கொள்கையை பின்பற்ற வேண்டும்: ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர்

 

காந்தி, அம்பேத்கர் கொள்கையை பின்பற்ற வேண்டும்: ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர்

இந்த ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமானது. மகாத்மா கொள்கையை நாம் பின்பற்றுவதில் பெருமைப்படுகிறோம். மஹாத்மா காந்தி, அம்பேத்கர் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும் என பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாபாதி உரையை தொடங்கினார்.

புதுடில்லி: இந்த ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமானது. மகாத்மா கொள்கையை நாம் பின்பற்றுவதில் பெருமைப்படுகிறோம். மஹாத்மா காந்தி, அம்பேத்கர் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும் என பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாபாதி உரையை தொடங்கினார்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். 

ஊழலற்ற இந்தியாவை உருவாக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். புதிய பாரதத்தை உருவாக்கும் நோக்கில் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன, முந்தைய நிலை இப்போது இல்லை. பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ஏழைகளுக்காக அரசாங்கம் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலவச கேஸ் திட்டத்தால், 6 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். 13 கோடி குடும்பங்களுக்கு மானிய விலை கேஸ் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் அவர், மருத்துவம், சுகாதாரம், மின்சாரம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை பற்றி உரை நிகழ்த்தினார். இடைக்கால நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

நாளைய கூட்டத் தொடரில், ரஃபேல் விவகாரம், இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சி கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பிரதமர் சொன்னது போல சுமூகமாய் பட்ஜெட் தொடர் நடைபெறுமா என்பது தெரியவில்லை.