காத்திருந்து நீண்ட கால தோழியை கரம் பிடித்தார்… 60 வயதில் முதல் திருமணம் செய்த காங்கிரஸ் தலைவர்…. வாழ்த்திய தலைவர்கள்…..

 

காத்திருந்து நீண்ட கால தோழியை கரம் பிடித்தார்… 60 வயதில் முதல் திருமணம் செய்த காங்கிரஸ் தலைவர்…. வாழ்த்திய தலைவர்கள்…..

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக். இவர் மகாராஷ்டிராவில் பிரபலமான காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணாவின் மகன் ஆவார். தற்போது 60 வயதாகும் முகுல் வாஸ்னிக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது நீண்ட கால தோழியான ரவீனா குரானாவை திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் சிறப்பாக நடந்து முடிந்தது. 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முகல் வாஸ்னிக் நேற்று முன்தினம் தனது நீண்ட கால தோழியை திருமணம் செய்தார். பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நேற்று புது கல்யாண ஜோடியை வாழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக். இவர் மகாராஷ்டிராவில் பிரபலமான காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணாவின் மகன் ஆவார். தற்போது 60 வயதாகும் முகுல் வாஸ்னிக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது நீண்ட கால தோழியான ரவீனா குரானாவை திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் சிறப்பாக நடந்து முடிந்தது. 

mukul-washnik-89

புதுமண தம்பதியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலங்களவை உறுப்பினர் அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர். மேலும் அசோக் கெலாட் டிவிட்டரில், முகுல் வாஸ்னிக் ஜி மற்றும் ரவீனா குரானா ஜி ஆகியோர் ஜோடியாக புதிய பயணத்தை ஒன்றாக இணைந்து தொடங்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நேரம் என்பதை நிரூபிக்கட்டும் என பதிவு செய்து இருந்தார்.

mukul-wasnik-09

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்த பிறகு, அந்த பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயர் பலமாக அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக முகுல் வாஸ்னிக் உள்ளதால் வருங்காலத்தில் அந்த கட்சியின் தலைவராகவும் வாய்ப்புள்ளது.