காதில் உயிருடன் இருந்த பல்லி: பெண் மருத்துவரின் மறக்கமுடியாத அனுபவம் இதுதானாம்!

 

காதில் உயிருடன் இருந்த பல்லி: பெண் மருத்துவரின் மறக்கமுடியாத அனுபவம் இதுதானாம்!

தனது முதல் நாள் பணியில்  மருத்துவர் ஒருவர் நோயாளி காதிலிருந்து சிறிய பல்லியை வெளியில் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. 

தாய்லாந்து: தனது முதல் நாள் பணியில்  மருத்துவர் ஒருவர் நோயாளி காதிலிருந்து சிறிய பல்லியை வெளியில் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. 

dr

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் வரண்யா நகாந்தாவி. சமீபத்தில் மருத்துவ படிப்பை முடித்த வரண்யா அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிக்கு சேர்ந்துள்ளார். முதல் நாள் பணிக்காக சென்ற வரண்யாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்..காது வலி என்று ஒருவர் வரண்யாவிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரது காதை சோதனை செய்து பார்த்தபோது அவரின் காதிற்குள் ஒரு சிறிய பல்லி  உயிருடன்  இருந்துள்ளது.

lizard

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்,  பல்லியை காதிற்குள் இருந்து வெளியே எடுத்தார். எனினும் அந்த நபரை மீண்டும் காது மருத்துவரிடம் செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார்.  தனது முதல் நாள்  பணி  அனுபவம் குறித்து வரண்யா சமூகவலைதளத்தில்  பதிவிட்டது தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

முதல் நாளே வித்தியாசமான அனுபவத்தை தந்த அந்த நாளை மருத்துவர்  வரண்யா நகாந்தாவி மறக்க மாட்டார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.