காதல் வாழ்க்கை எந்த ராசிக்கெல்லாம் கைகூடி மகிழ்ச்சியைத் தரும்?

 

காதல் வாழ்க்கை எந்த ராசிக்கெல்லாம் கைகூடி மகிழ்ச்சியைத் தரும்?

9.10.2019 (புதன்கிழமை)

நல்ல நேரம் 
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம் 
காலை 7.30 மணி முதல்  9 வரை
சந்திராஷ்டமம் 
பூசம், ஆயில்யம்
பரிகாரம் –  பால்
இன்று – ஏகாதசி விரதம்                        

மேஷம் 

வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 

பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவல்களை வெளியில் சொல்லாதீர்கள். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் 

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். மனதிற்கினியவருடன் இனிமையான நட்பைக் கெடுத்துவிடும். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். 
அதிர்ஷ்ட எண்: 7

கடகம் 

ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான, மெதுவான நாள். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய  நிறைய பிரச்சினைகள் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் 

கஷ்டங்களை சிந்தித்து அதைப் பெரிதாக நினைப்பதால் உங்களின் தார்மிக நம்பிக்கை பலவீனமடையும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சிக்க வேண்டும். மதிப்புமிக்க உங்களின் அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். உங்கள் தொழில் வளத்தை மேம்படுத்த தொழில் திறமையைப் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9

கன்னி 

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது  அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள். தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

துலாம் 

இன்று வீட்டிற்குத் தேவையான மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த மனைவி உதவுவார். மற்றவர்களை சார்ந்திருப்பதைவிட,, தன் சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையில் உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பயணம் ரொமாண்டிக் தொடர்பை வளர்க்கும். 
அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். நீங்கள் சேர்ந்து வாழ்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பதில் கவனமாக இருக்கவும்.  ஏதாவது மாறுபட்ட கருத்து இருந்தால் சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். உங்கள் உங்கள் மன உறுதியால் இன்று ஆபீசில் உங்களது நாள் நல்ல முறையில் கழியும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 3

தனுசு 

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள். நிலுவையில் உள்ள சிறிய ஆனால் முக்கியமான வேலைகளை இன்று முடிக்க முடியும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 

உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள். வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும்.
அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 

நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள். அது கடினமாகவும், அதிக பலன் தருவதாகவும் இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 6

மீனம் 

கிரியேட்டிவான ஹாபிகள் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். இன்று நீங்கள் இது வரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4