காதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்

 

காதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்

” காளிதாசன்… கண்ணதாசன் கவிதை நீ” என்று சினிமா பாடல் வரிகள் கூட அவரின் புகழைத் தான் பறைசாற்றுகிறது

காதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்

கவியழகுக்கே பேர் போன மகாகவி காளிதாசன் தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

kalidasa

 ” காளிதாசன்… கண்ணதாசன் கவிதை நீ” என்று சினிமா பாடல் வரிகள் கூட அவரின் புகழைத் தான் பறைசாற்றுகிறது. அப்படிப்பட்ட காளிதாசனின் படைப்பு கதாபாத்திரங்களை தன் அழகிய ஓவியத் திறமையால் வடித்துள்ளார்.

kalidasan

டாக்டர் பாரதி ஜெயின் இதில் நாட்டம் கொண்டு ஈடுபட்டுள்ளார். காளிதாசனின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழப் பார்த்து இந்த ஓவியத்தை தீட்டியுள்ளார். இந்த ஓவியம் ஆல்கபூரி, ஹஸ்தினாபூர் மற்றும் ஹிமாலய கற்பனை உலகின் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓவியம் மிகவும் நேர்த்தியாகவும் வெளிப்படையாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.

kalidasa 1

மேலும் இவருடைய படைப்புகள் காளிதாசனின் வெவ்வேறு கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டவையாக உள்ளது. அபிக்ஞான சகுந்தலம், குமாரசம்பவம், மேகதூதம் போன்ற காளிதாசனின் படைப்புகளை தேர்ந்தெடுத்து அதில் வரும் கதாபாத்திரங்களை தன் ஓவியமாக தீட்டியுள்ளார். சகுந்தலா, ஷங்கர், பார்வதி, யாக்ஷா போன்ற கதாபாத்திரங்களை நவீன கால ஓவிய தீட்டலில் தீட்டி தன் திறமையை காட்டியுள்ளார்.

kalidasa 2

இயற்கையான சூழலில் பறந்து வரும் பட்டாம்பூச்சி நிறங்களும், இசைத்து வரும் பறவைகளின் நிறங்களையும் பார்ப்பது போன்று தான் இந்த வண்ணமயும் ஓவியம் அமைந்துள்ளது. ஏன் என்றால் காதல், காமத்தை காளிதாசரை விட அழுத்தமாக வேறு யாரால் சொல்லிவிட முடியும் என்பதற்காகத் தான் இந்த பிராட் கலர்கள்.

kalidasa

பாரதியின் ஓவியம் கலை அருங்காட்சியகத்தில் தனி இடத்தை பெற்றுள்ளது. அதிலும் அவர் தீட்டியுள்ள ஓவியத்தில் இடம்பெற்றுள்ள இளஞ்சிவப்பு, தங்க நிறம், சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பகுதிகள் என்று பார்க்கும் போதே ஓவியத்தின் நிஜ அழகை பரிசாக்குகின்றன. அப்படியே இயற்கையின் மடியில் நின்று ஏராளமான இலைகள் காற்றுடன் தவழும் விதத்தில், காற்றை துளையிடுவது போன்று பார்வையாளர்களின் மனத்தை துளையிட்டு செல்கிறது.