காதல் -மோதல் -கொலை :ஜாமீன் ரத்து செய்யப்பட்டவரின் வெறிச்செயல் -பலாத்காரம் செய்த பெண்ணின் தந்தையை கொன்ற கொடூரம்

 

காதல் -மோதல் -கொலை :ஜாமீன் ரத்து செய்யப்பட்டவரின் வெறிச்செயல் -பலாத்காரம்  செய்த பெண்ணின் தந்தையை கொன்ற கொடூரம்

இந்த சம்பவம், திங்கள்கிழமை அதிகாலையில் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தின் சாத்ரி கிராமத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: ஜாமீன் ரத்து செய்யப்பட்ட பின்னர் சுதந்திரமாக சுற்றித் திரிந்த குற்றவாளியால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான  பெண்ணின்  தந்தை கொல்லப்பட்டார்
.ராஜஸ்தான் காவல்துறையின் அலட்சியத்தை சுட்டிக்காட்டும்   இந்த சம்பவம், திங்கள்கிழமை அதிகாலையில் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தின் சாத்ரி கிராமத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரின் வீட்டிற்குள் புகுந்து குற்றவாளி  அதிகாலை 1.30 மணியளவில் குத்தியுள்ளார். அவரது தாயும் சகோதரரும் அவரை மீட்க முயன்றபோது, தாக்குதல் நடத்தியவர் அவர்களையும் குத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர் தனராம் என அடையாளம் காணப்பட்டார், பின்னர் தப்பிப்பதற்காக  கூரையிலிருந்து குதித்தபோது  காயமடைந்ததாக  போலிசார் தெரிவித்தனர். பின்னர் அவரை கிராமவாசிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ttn

பாலி நகரில் உள்ள கிஷான்புரா கிராமத்தில் வசிக்கும் தனராம் என்ற குற்றவாளி 
நவம்பர் 10 ம் தேதி  தன்னை நாசிக் அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக இறந்தவரின் மகள்  புகார் கூறினார். அந்த மைனர் சிறுமி ஜூலை மாதம் தனராமுடன் ஓடிப்போய் நவம்பர் 10 ஆம் தேதி தனது வீட்டிற்கு திரும்பியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் திரும்பிய உடனேயே, அவர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கற்பழிப்பு மற்றும் கடத்தல் புகார் அளித்தார், அதன்பிறகு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையினர் நாசிக் சென்றனர், ஆனால் அவரை கைது செய்யவில்லை.

ttn

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நாசிக் நீதிமன்றத்தில் இருந்து இடைக்கால ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், டிசம்பர் 13 ம் தேதி, பாலியில் உள்ள ஏ.டி.ஜே நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்தது, ஆனால் அவர் போலீசாரால் கைது செய்யப்படவில்லை.
பாலி காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஷர்மா கூறுகையில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (எஸ்.எச்.ஓ) ராஜ்தீபேந்திரா தனது வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களுக்கு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.