காதல் ஜோடிக்காக திறக்கப்பட்ட நீதிமன்றம் : மெக்ஸிகோ பெண்ணை மணந்த இளைஞர்!

 

காதல் ஜோடிக்காக திறக்கப்பட்ட நீதிமன்றம் : மெக்ஸிகோ பெண்ணை மணந்த இளைஞர்!

இருவரும் விண்ணப்பித்திருந்தனர். இதனால் மணப்பெண் டானா கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மெக்ஸிகோவிலிருந்து இந்தியா வந்தார். 

ஹரியாணா மாநிலம் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் காஷ்யப்.  இவரும் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண் டானா ஜோஹரி ஓலிவெராஸ் என்பவருக்கும்  மொழி கற்கும் செல்போன் செயலி மூலம்  நட்பு ஏற்பட்டுள்ளது.

ttn

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி இருவரும் விண்ணப்பித்திருந்தனர். இதனால் மணப்பெண் டானா கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மெக்ஸிகோவிலிருந்து இந்தியா வந்தார். 

tt

மார்ச் 18-ம் தேதி இருவரும்  திருமணம் கொள்ள இருந்த நிலையில் கொரோனாவால் திருமணம் தடைப்பட்டது.  இதனால் காதல் ஜோடியான  நிரஞ்சன், டானா ஆகியோர் சந்தித்து மனு அளித்து திருமணம் செய்ய அனுமதியைப் பெற்றனர். இதை தொடர்ந்து ரோடக் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமணத்தை நடத்த அனுமதி கிடைத்தது.

tt

இந்நிலையில் கடந்த  ஏப்ரல் 13-ம் தேதி இரவு 8 மணிக்கு ரோடக் நீதிமன்றம் இந்த காதல் ஜோடிக்காக திறக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.