காதலை முறித்த முதல் மற்றும் ஒரே காதலி: வீட்டை எரித்த கோபக்கார இளைஞர்!

 

காதலை முறித்த முதல் மற்றும் ஒரே காதலி: வீட்டை எரித்த கோபக்கார இளைஞர்!

இங்கிலாந்தில் தனக்கு கிடைத்த முதல் மற்றும் ஒரே காதலி தன்னுடைய காதலை முறித்ததால் கோபத்தின் உச்சிக்கே சென்ற இளைஞர் ஒருவர் காதலியின் வீட்டை எரித்துள்ளார். உச்சக்கட்ட ஸ்டிரெஸ் காரணமாக வீட்டை எரித்துவிட்டதாக இப்போது அவர் புலம்பி வருகிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டாப்ஸ் கர்னாட்ஸ் (23). கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி ஒரு பாட்டில் விஸ்கியை அருந்திவிட்டு, தன்னுடைய முன்னாள் காதலி வீட்டுக்கு சென்று பொருட்களை அடித்து உடைத்துள்ளார். அப்போதும் கோபம் தீரவில்லை.

இங்கிலாந்தில் தனக்கு கிடைத்த முதல் மற்றும் ஒரே காதலி தன்னுடைய காதலை முறித்ததால் கோபத்தின் உச்சிக்கே சென்ற இளைஞர் ஒருவர் காதலியின் வீட்டை எரித்துள்ளார். உச்சக்கட்ட ஸ்டிரெஸ் காரணமாக வீட்டை எரித்துவிட்டதாக இப்போது அவர் புலம்பி வருகிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டாப்ஸ் கர்னாட்ஸ் (23). கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி ஒரு பாட்டில் விஸ்கியை அருந்திவிட்டு, தன்னுடைய முன்னாள் காதலி வீட்டுக்கு சென்று பொருட்களை அடித்து உடைத்துள்ளார். அப்போதும் கோபம் தீரவில்லை. இதனால், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஒன்று சேர்த்து வீட்டுக்கு தீவைத்துள்ளார். தீவிபத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது அவரும் மாட்டிக்கொண்டார். அவருடைய கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. நல்லவேளை, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், தீ வீடு முழுவதும் பரவுவதற்கு முன்பு அணைக்கப்பட்டது.

house

இது குறித்து தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அப்போது, கிறிஸ்டாப்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனக்கு கிடைத்த ஒரே காதலியும் தன்னை வேண்டாம் என்று கூறி சென்றதால் கிறிஸ்டாப்ஸ் மன அழுத்தத்துக்கு ஆளானார். இதனால், என்ன செய்கிறோம் என்று தெரியாத வகையில் அவர் வீட்டுக்கு தீ வைத்துவிட்டார். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதை ஏற்க நீதிபதி சில்வியா மறுத்துவிட்டாராம். “கிறிஸ்டாப்ஸ் செய்தது மிகவும் அபாயகரமான செயல். தீ பக்கத்து வீடுகளுக்கு பரவியிருந்தால் என்ன ஆகியிருக்கும். பக்கத்தில் வயது முதிர்ந்த தம்பதியினர் உள்ளனர். அதே நேரத்தில், இந்த இளைஞர் இயல்பிலேயே இப்படி வன்முறையில் இறங்கக் கூடியவர் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. காதலி காதலை மறுத்த உடன் ஏற்பட்ட மன அழுத்தம் என்று இதை குறிப்பிடுகின்றீர்கள்” என்றார்.

lovers

அதற்கு வழக்கறிஞர், “ஆம், இது அந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் ஏற்பட்ட மன அழுத்தம். ஏனெனில் என்னுடைய கட்சிக்காரருக்கு அந்த பெண்தான் முதல் மற்றும் ஒரே காதலியாக இருந்துள்ளார்” என்றார். இதனால், கடுமையான தண்டனை வழங்காமல், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இரண்டு ஆண்டுகள் இடைநீக்கமும் செய்துள்ளார்.