காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்.. கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் : சாகும் வரை ஆயுள் தண்டனை!

 

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்.. கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் : சாகும் வரை ஆயுள் தண்டனை!

இவரின் காதலுக்கு  சுப்பிரிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அவரை பின் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  தங்கதுரை வற்புறுத்தி வந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் பகுதியில் வசித்து வந்த தங்கதுரை(32) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த  சுப்பிரிகா(24) என்ற பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்தார். இவரின் காதலுக்கு  சுப்பிரிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அவரை பின் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  தங்கதுரை வற்புறுத்தி வந்தார். இதனால் கடுப்பான பெற்றோர்  தங்கதுரை மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும், அவர் சுப்பிரிகாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். 

ttn

ஒரு நாள் திடீரென்று சுப்பிரிகா வீட்டுக்குள் புகுந்த தங்கதுரை, அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதுமட்டுமில்லாமல் தடுக்க சென்ற சுப்பிரிகாவின் சகோதரர் மற்றும் தாயையும் கத்தியால் குத்தினார். ஆனால், அவர்கள் இரண்டு பேரும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இதனையடுத்து தங்கதுரையைக் கைது செய்த போலீசார் கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இச்சம்பவம் கடந்த 2914 ஆம் ஆண்டு நடந்தது. இந்த கொலையில் வழக்கு விசாரணை முடிந்ததால், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

tthn

அப்போது நீதிபதிகள் சுப்பிரிகாவை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும், சுப்பிரிகாவின் தாய், சகோதரனைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காகவும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். அவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.