‘காதலுக்கு மரியாதை’ செய்த நடிகர் விஜய் குடும்பம்…நடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு விரைவில் டும் டும் டும்!

 

‘காதலுக்கு மரியாதை’ செய்த நடிகர் விஜய் குடும்பம்…நடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு விரைவில் டும் டும் டும்!

எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது  எஸ்.ஏ.சந்திரசேகரின்  பேத்தி. 

மறைந்த பிரபல நடிகர் முரளிக்கு  அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அதர்வா திரைப்பட நடிகராக உள்ளார்.  லயோலா கல்லூரியில் படித்த ஆகாஷுக்கு இயக்குநராக  விருப்பம். ஆகாஷும் தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவும்  காதலித்து வந்துள்ளனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது  எஸ்.ஏ.சந்திரசேகரின்  பேத்தி. 

ttn

ஆகாஷ் – சினேகா காதலுக்கு மதம்  தடையாக இருந்த நிலையில் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால் காதலுக்கு மரியாதை செய்துள்ளனர் இவர்களின் குடும்பத்தினர். இதுகுறித்து இவர்களின் நெருங்கிய வட்டாரத்திலோ, எஸ்.ஏ.சிக்கு  மிகவும் பிடித்தமான சினேகா எப்போதும் அவருடைய அலுவலகத்தில் தான் இருப்பாள். அதனால் தான் `சட்டம் ஒரு இருட்டறை 2’ படத்தில் சினேகாவை இயக்குநராக அறிமுகம் செஞ்சார் சந்திரசேகர்.

ttn

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தான் இவர்கள் காதல் கைகூடியுள்ளது. ஆகாஷும் அண்ணன்  அதர்வா இருப்பதால் திருமணம் பற்றி யோசிக்காமலிருந்தார். ஆனால்  காதலுக்கு  எதிர்ப்பு கிளப்பியதால் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாகிவிட்டது’ என்கின்றனர்.

ttn

வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ஆகாஷ் – சினேகா நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.