காதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன்! பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்! பெண்களே உஷார்!

 

காதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன்! பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்! பெண்களே உஷார்!

நிர்பயா, சுவாதி என்று எத்தனையோ இளம் பெண்களை உயிரை இழந்தாலும், காம வெறி பிடித்து திரியும் கயவர்கள் திருந்தவே மாட்டார்கள் போல…பாஸ்ட்புட் கலாசாரத்தை நோக்கி அடுத்த தலைமுறை வளர்ந்து வருவது நெஞ்சில் பதைபதைப்பை உருவாக்கிறது. பெண்களை கேலி, கிண்டல் செய்வது, பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்குவது என்பதை எல்லாம் திரைப்படங்கள் கற்றுத் தருகின்றன என இத்தனைக் காலங்கள் குறை சொல்லி வந்தோம். இப்போது, ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், அந்த வீட்டில் ஆறு ஆண்ட்ராய்டு செல்போன்கள் இருக்கின்றன.

நிர்பயா, சுவாதி என்று எத்தனையோ இளம் பெண்களை உயிரை இழந்தாலும், காம வெறி பிடித்து திரியும் கயவர்கள் திருந்தவே மாட்டார்கள் போல…பாஸ்ட்புட் கலாசாரத்தை நோக்கி அடுத்த தலைமுறை வளர்ந்து வருவது நெஞ்சில் பதைபதைப்பை உருவாக்கிறது. பெண்களை கேலி, கிண்டல் செய்வது, பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்குவது என்பதை எல்லாம் திரைப்படங்கள் கற்றுத் தருகின்றன என இத்தனைக் காலங்கள் குறை சொல்லி வந்தோம். இப்போது, ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், அந்த வீட்டில் ஆறு ஆண்ட்ராய்டு செல்போன்கள் இருக்கின்றன. யூ-ட்யூப், மொபைல் ஆப்கள் என்று இளம் வயதிலேயே அத்தனை சமூக சீர்கேடுகளையும் செய்வதற்கு பெரும்பாலான இளைஞர்கள், குறிப்பாக 15லிருந்து 20 வயதுக்குள்ளானவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். சாகசங்களுக்காகவும், வீண் பெருமைகளுக்காகவும் இந்த கீழ்தரமான செயல்களை செய்யத் துவங்கும் அவர்கள் நாளடைவில் சமூகத்தின் முன் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். அப்படி காதல் என்கிற போர்வையில் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியைத் தருகிறது.

lovers

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது வடக்குச் செவல் என்கிற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 19 வயதே ஆன சுரேஷ்குமார் அருகில் இருந்த வேம்பாரில் இருக்கும் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சென்று வருகையில் வேம்பாரைச் சேர்ந்த ராமலிங்கம் (21), அழகுராஜா (19), ராமச்சந்திரன் (22) ஆகிய மூவரும் நண்பர்களாக அறிமுகமாகியிருக்கின்றனர். பின்னர் இந்த மூவரும் சென்னையில் உள்ள கடைகளில் வேலைக்கு வந்து விட்டனர். விடுமுறை நாட்களில் மூவரும் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்று சுரேஷ்குமாருடன் பொழுதைப் போக்கி வந்துள்ளனர். 
சுரேஷ்குமார் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். தினமும் தூத்துக்குடி வரைச் சென்று அந்தப் பெண்ணை வேலையில் விட்டு விட்டு சுரேஷ்குமார் வேம்பூரில் இருக்கும் உப்பளத்திற்கு சென்று விடுவார். இருவரும் இப்படி ஊர் ஜோடியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. அவர்கள் மகளுக்கு அறிவுரைக் கூறி, கண்டித்துள்ளனர். மகளின் போக்கு பெற்றோர்களுக்கு கவலையைத் தரவே, இனி வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியில் எங்கும் அனுப்பாமல், தடை போட்டு வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்தனர். 

women harassement

தினமும் காதலியுடன் ஊர் சுற்றி வந்த சுரேஷ்குமார், திடீரென்று காதலியைப் பார்க்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் தான் நண்பர்களின் போர்வையில் விபரீத எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. சுரேஷ்குமாரின் காதலியை சந்திக்க தான் ஏற்பாடு செய்வதாக, அவரின்  நண்பர் ராமலிங்கம் கூறியுள்ளார். அதன் பிறகு சுரேஷ்குமாரின் காதலியிடம் ஆள் வைத்து பேசி, வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லியிருக்கிறார்கள். பின், விளாத்திகுளம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். காட்டுப் பகுதியில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த இளம்பெண்ணை சுரேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். 
காதலன் உடன் இருக்கிறான் என்று பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வந்திருந்த அந்த பெண், சுரேஷ்குமாரும், அவனுடைய நண்பர்களும் கயவர்களாக மாறியதை கண்டு அதிர்ச்சியடைந்தாள். எப்படியாவது அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று தலைத்தெறிக்க ஓட ஆரம்பித்தாள். அதிர்ச்சியிலும், அயர்ச்சியிலும் ஓடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி காட்டுப் பகுதியிலேயே கீழே விழுந்தார். காட்டுப்பகுதியில் சில இளைஞர்கள் ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டு ஓடிச் செல்வதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு இது பற்றித் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி,  பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தப்பியோடிய சுரேஷ்குமார், உள்ளிட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.